Third year kindergarten graduation ceremony at Almighty Vidhyalaya school at Siruvachur
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில் மூன்றாம் ஆண்டு மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பள்ளி துணை முதல்வர் சாரதா செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். பள்ளி முதல்வர் டாக்டர் சிவகாமி முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் ஆ.ராம்குமார் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர்கள் விஜய்ஆனந்த், அருண்குமார், வேல்முருகன், ஹாஜிமுகமது மற்றும் குமார் ஆகியோர் கலந்து கொண்டு 56 மழலையர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள். அவர்கள் பேசும்போது தற்போது கோடைவெயில் அதிகரித்துள்ளதால் வழக்கத்தை விட தண்ணீர் இரண்டு மடங்கு பருக பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் முன்வரவேண்டும் இயற்கை முறை உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் சந்திரோதயம், ஹேமா, தீபனா, கவிதா ஆகியோர் செய்திருந்தனர்.