Those belonging to the outlying districts near Perambalur are lodged in a government school on behalf of the Revenue Department

பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தில் வெளி மாவட்டத்தில் இருந்து ஜோசியம் பார்க்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் 5 குடும்பத்தை சேர்ந்த 20 ஆண்கள், 8 பெண்கள், 9 குழந்தைகள் என மொத்தம் 37 நபர்களை செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட வருவாய் துறையினர் தங்க வைக்க நடவடிக்கை எடுத்தனர். அவர்கள் இரவு உணவை தாங்களே சமைத்து சாப்பிட்டு விட்டதால் தற்காலிகமாக பிஸ்கட் பிரட் ,தண்ணீர் பாட்டில் மற்றும் மெழுகுவர்த்தி வழங்கி, அவர்களுக்கு உணவு வழங்கவும் நடடிவக்கை எடுத்துள்ளனர். மேலும் மாவட்டம் முழுவுதும் புயல் பணிகளுக்காக வருவாய், காவல் துறையினர், தீயணையப்பு துறையினர் இணைந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் தங்கி நிவர் புயலை எதிர் கொள்ள தயார் நிலையில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!