Those who wish to apply for National Agriculture Development Scheme Fishery pools – District Collector Info
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது:

fishery-project 2016-2017-ம் ஆண்டு தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டரில் ரூ.5. இலட்சம் செலவில் சொந்த நிலத்தில் மீன்வளர்ப்பு குளங்கள் அமைப்பவர்களுக்கு அதிகபட்சமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.2.00 இலட்சம் மற்றும் மீன்குஞ்சுகள் வாங்குவதற்கு ரூ.10,000ஃ-ஆக மொத்தம் ரூ.2.10 இலட்சம் பின்னிலை மானியமாக (Backended Subsidy) அளிக்கப்படும்.

ஒரு ஹெக்டரில் மீன்வளர்ப்பு குளங்கள் அமைக்க விரும்புபவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

மீன்வளர்ப்பு குளங்கள் புதியதாக அமைக்க விரும்பும் பயனாளிக்கு சொந்த நிலம் அல்லது 10 வருட குத்தகைக்கு பெற்று நிலம் வைத்திருக்க வேண்டும். விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து அதிகம் பெறப்படின், முன்னுரிமை அடிப்படையில், தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மீன் வளர்ப்புக் குளங்கள் அமைக்க விருப்பமுள்ளவர்கள் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக இரண்டாம் தளத்தில் இயங்கும் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் பெரம்பலூர் புதிய பேரூந்து நிலையம் அருகில் உள்ள SKC நகரில் இயங்கும் மீன்துறை ஆய்வாளர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்ப படிவம் பெற்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!