Three arrested after robbery plea to the perambalur surrounding area
பெரம்பலூர் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே நடந்த வழிப்பறி தொடர்பான புகார்கள் வரத் தொடங்கியது.
பாதிக்ப்பட்ட நபரான பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
வழிப்பறியில் தொடர்புடைய பெரம்பலூர் திருநகரை சேர்ந்த சுப்பையா மகன் ஆனந் (எ) முருகானந்தம் (வயது 27), சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த நவாத் மகன் முகமது சித்திக் (வயது 34), பெரம்பலூர் புதிய காலணியை சேர்ந்த செல்வராஜ் ராஜு (எ) கண்ணன் (வயது 28) ஆகியோரை கைது செய்து பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.