Time change details of buses in operates: Perambalur Collector Information

பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா வைரஸின் இரண்டாம் கட்ட தாக்குதலினை கட்டுப்படுத்திடவும், நோயின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாத்திடவும், பல்வேறு தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தமிழக அரசின் வழிகாட்டு விதிமுறைகளின்படி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று (கோவிட்-19) அதிகமாக பரவி வருவதால் அதனை கட்டுபடுத்தும் நோக்கில் தமிழக அரசு தெரிவித்துள்ளபடி, வருகின்ற 20.04.2021 முதல் 30.04.21-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கவும், இதனால் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை பேருந்துகள் இயக்கம் செய்யக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(கும்ப)லிட்., திருச்சி மண்டலம் மூலம், அரசு அறிவித்துள்ள ஊரடங்கினை பின்பற்றிட பேருந்துகள் இயக்கத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து பெரம்பலூர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் நகரப்பேருந்துகள் இரவு 9.30 மணிக்கு நடை எடுத்து அந்தந்த ஊர்களுக்கு இரவு தங்கல் செய்யப்படும் பேருந்துகள் வழக்கம் போல் அனைத்து வழித்தடங்களிலும் பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இயக்கப்படும்.

பெரம்பலூர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் தொலைதூர வழித்தட புறநகரப்பேருந்துகள் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மாலை / இரவு கடைசி பேருந்துகளாக இயக்கப்படவுள்ளது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்லும் பேருந்து மாலை 4.30 மணிக்கும், விழுப்புரம் செல்லும் பேருந்து இரவு 7.00 மணிக்கும், லப்பைக்குடிக்காடு செல்லும் பேருந்து இரவு 9.00 மணிக்கும், ஆத்தூர் செல்லும் பேருந்து இரவு 8.00 மணிக்கும், திருச்சி செல்லும் பேருந்து இரவு 8.30 மணிக்கும், துறையூர் செல்லும் பேருந்து இரவு 9.00 மணிக்கும், அரியலூர் செல்லும் பேருந்து இரவு 9.00 மணிக்கும் இரவு நேரத்தில் கடைசி பேருந்துகளாக இயக்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!