Timeline extension to apply to minority students for scholarship
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு :
தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரைக்கான பள்ளி படிப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பள்ளி மேற்படிப்பு பயிலும் கிறித்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர் மற்றும் பார்சி, ஜெயின் வகுப்பைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ – மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2017-2018-ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரைக்கான பள்ளி படிப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கான புதியது (ம) புதுப்பித்தல் மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை மாணவ – மாணவியர் ஆன்லைனில் www.scholarships.gov.in விண்ணப்பித்திட வேண்டிய காலக்கெடு 31.10.2017 வரையிலும் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையின மாணவஃ மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையலாம், என தெரிவித்துள்ளார்.