Tirupur District bus drivers, conductors protection workshops: Collector Palanisami initiated.
திருப்பூர் மாவட்டத்தில் தனியார் பேருந்துகளினால் விபத்து ஏற்படுவதை தடுக்கும் விதமாக பேருந்து நேர பிரச்சனை மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம் திருப்பூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி துவக்கி வைத்தார். இதனையடுத்து விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த குறும்படங்களும் திரையிடப்பட்டன. இந்நிகழ்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.