TMC Parties, should get 5 thousand more votes for RT Ramachandran – GK Vasan

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் ஆர்.டி.இராமச்சந்திரனை ஆதரித்து, கொளக்காநத்தம் கிராமத்தில், த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:

நேர்மை, எளிமை, துாய்மை வெளிப்படைத்தன்மைதான் எங்களின் அரசியல். மக்களின் மகிழ்ச்சியும் எழுச்சியும் பார்க்கும் போது வேட்பாளரின் வெற்றி தெரிகிறது. வாக்குவித்தியாசம் எவ்வளவு என்பதற்குதான் போட்டி. ஆய்வுகளின் அடைப்படையில் குன்னம் தொகுதியில்தான் கிராமங்கள் அதிகமாக உள்ளது. மத்திய மாநில அரசு திட்டங்கள் அதிகம் வந்த தொகுதி குன்னம். ஜெயலலிதா மறைந்த பிறகுநடைபெறும் சட்டசபை தேர்தல்.அவர் ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்பதற்காக நடைபெறும் தேர்தல்.

ஜெயலலிதா மகளிர்களுக்கு அதிக திட்டங்களை கொடுத்தவர். தற்போதைய முதல்வர் சாமானியர்களின் முதல்வர்.மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படக்கூடியவர். நாட்டிலேயே தமிழகத்தில்தான் மகளிர்களுக்கு அதிகதிட்டங்கள் உள்ளது. தேர்தல் முடிந்தவுடன் 1500 ரூபாய் உங்களுக்கு வரும். திமுக 2 வருடங்களுக்கு முன்பு வடிகட்டிய பொய்யை கூறி வெற்றி பெற்ற 39 எம்.பிக்கள் தற்போது மௌனமாக இருக்கிறார்கள். 6 சவரன்நகை கடன் தள்ளுபடி செய்வோம் என நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூறி வெற்றிபெற்றதை கூறி விமர்சனம். அப்போது உங்களை ஏமாற்றியவர்களை தற்போது நீங்கள் ஏமாற்றுங்கள். மத்திய மாநில அரசுகள் இணக்கமாக இருந்தால்தான் அதிக திட்டங்கள் கொண்டுவரமுடியும். நீங்கள் அளிக்கும் வாக்கு நல்லவர்களுக்கு சென்று சேரவேண்டும்.பொல்லாதவர்களுக்குசெல்லக்கூடாது.அதனால் திமுகவிற்கு வாக்களிக்காதீர்கள். திமுக மீண்டும்ஆட்சிக்கு வரவேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள்.ஆனால் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனையை பேசாமல் புறகணிப்பு அல்லது வெளிநடப்பு செய்கிறார்கள் என விமர்சனம். கொரானா காலத்தில் 1000 ரூபாய் கொடுத்த அரசு,பொங்கலுக்கு 2500 ரூபாய் கொடுத்த அரசு. பொங்கல் பணத்தை தடுப்பதற்கு திமுக வழக்குப்போட்டது.

நல்லது செய்யனும் இல்லைனா நல்லது செய்ய விடனும். நல்லவர்களுக்கு வாய்ப்பளித்தால் தொகுதிவளரும். அதிமுக ஆட்சி அடக்கமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதிமுக வாக்குறுதி தங்கம். திமுக வாக்குறுதி பித்தளை என விமர்சனம் செய்தார். திமுக விற்கு வாக்களிக்க நினைத்தால் மண்குதிரை ஆற்றில் இறங்கிய கதை ஆகிவிடும். மகளிரை தரக்குறைவாக பேசிய கட்சி திமுக.அதற்குஎடுத்துக்காட்டு திமுக முன்னாள் அமைச்சரின் பேச்சு. பெண்களை இழிவு படுத்தும் திமுகவிற்கு பெண்கள் வாக்களிக்க கூடாது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அடங்கா வகையில் பேசுகிறார்கள் அவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகு அடக்கமுடியாது. திமுக விற்கு முற்றுபுள்ளி வைக்கும் தேர்தல் இது. தமாக வினர் உழைப்பால் 5000 வாக்குகளை கூடுதலாக பெற்றுத்தரவேண்டும். இது என் ஆசை, இதை கட்சியினர் நிறைவேற்றும் வகையில் உழைக்க வேண்டும், என பேசினார். அங்கிருந்த நரிக்குறவர் இன மக்களுக்கு கூடுதல் உதவி பெற்று அவருடைய வாழ்வாதாரம் உயர்த்த போவதாகவும் தெரிவித்தார்.

அதிமுக ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கர்ணன், குரும்பாபாளையம் சி.நாகராஜ், மற்றும் தாமக, பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றியம், நகரம், பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள் உள்பட பொதுமக்கள் திராளாக கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!