To ensure safety in the use of private and Govt. Public schools in the perambalur District to the order by DRO

பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் மழைக்காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சாpக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளம், மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், பேரிடர் மேலாண்மை மற்றும் அவசர கால மீட்பு நடவடிக்கைகள் குறித்த அரசு – தனியார் கல்வி நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்ட நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன் தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்களையும் முறையான ஆய்வு செய்து, பழுதான கட்டிடங்களாக இருப்பின் பழுது நீக்கி பிறகு பயன்படுத்தவேண்டும். அவ்வாறு பழுது நீக்கும் வரை வேறு நல்ல கட்டிடங்களை வகுப்புகளை மாற்றம் செய்தல் வேண்டும்.

மேலும் கட்டிடங்களில் இணைக்கப்பட்டுள்ள மின் வயர்களை ஆய்வு செய்து வயர்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருந்தால் அதனை அலட்சியப்படுத்திடாமல் அதன் பழுதுகளை உடனடியாக நீக்கி மழை காலத்தின்போது மின்கசிவு ஏற்படாவண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் உள்ள கழிவு நீர் வாய்க்கால்களில் மழைநீர் தேங்காமல் செல்வதற்கு வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஏற்படும் துற்நாற்றம் மற்றும் நோய்களிலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும்.

கட்டிடங்களின் வளாகத்தில் உள்ள மரங்களின் நிலை எவ்வாறு உள்ளது என ஆராய்ந்து அதனால் பாதிப்பு நேராவண்ணம் விழும் நிலையில் உள்ள மரங்கிளைகளை அகற்றிவிடுவது மிகவும் பாதுகாப்பானதாகும். மேலும் மாணவ, மாணவிகளிடம் மழைக்காலங்களில் ஏற்படும் பேரிடரின் போது எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது என ஆசிரியர்கள் முன்கூட்டியே அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திடவேண்டும்.

மழைக்காலங்களில் ஏற்படும் தொற்றுநோய்கள் குறித்தும், உயிர் பாதுகாப்பு குறித்தும், பிறருக்கு உதவிடுதல் குறித்தும் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக செயல்படவேண்டும் என அறிவுறுத்தவேண்டும்.

இவ்வாறு நாம் முன்னேற்பாடுகள் செய்யும் பட்சத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் முடிந்த வரை ஏற்படும் பெரிய இழப்புகளிலிருந்தும் நம்மையும், நம் உடமைகளையும், நம் சுற்றாத்தாரையும் காப்பாற்றிடமுடியும் என்பதை உணர்த்திடவேண்டும், என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மனோகரன், மாவட்ட கல்வி அலுவலர் பிரிதிவிராஜன் மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!