To prove that Perambalur town is a DMK stronghold, candidate Jayalakshmi must be ensured a victory margin of 20,000 votes—MLA Prabhakaran campaigns.

பெரம்பலூர் நகரில் இன்று காலை முதல் திமுக வேட்பாளர் டாக்டர் ஜெயலட்சுமி, மதசார்பற்ற கூட்டணி கட்சியினருடன் வாக்குகள் சேகரித்தார். அப்போது, பெரம்பலூர் நகர திமுக செயலாளரும், எம்.எல்.ஏவுமான எம்.பிரபாகரன் பங்களா ஸ்டாப்பில் வேட்பாளர் ஜெயலட்சுமியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
அதிமுக ஆட்சியின் போது, ஓடாத பேன், மிக்சி, கிரைண்டர்களை வழங்கினர். அவைகள் குப்கைக்கும், பழைய இரும்பு கடைகளுக்கும் சென்றுவிட்டன. அது போல தரமற்ற பொருட்களை மக்களுக்கு சென்றுவிடக் கூடாது, தரமான உறுதியான பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அனைவருக்கும் ரூ. 8 ஆயிரம் டோக்கன் வழங்கப்படுகிறது. மேலும், மகளிர் உரிமைத் தொகை, உள்ளிட்ட பல திட்டங்களை கடந்த தேர்தலில் திமுக வழங்கி உள்ளது. தற்போது பல திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்துள்ளது. பெரம்பலூர் மாநகரட்சியாக அறிவிக்கப்பட உள்ளது.
கடந்த தேர்தலில் பெரம்பலூர் நகரத்தில் மட்டும் 11 வாக்குகள் வித்தியாசத்தில் அதிகம் திமுக பெற்றது. அதை போலவே பெரம்பலூர் நகரில் இந்த 2026 சட்ட மன்ற தேர்தலில், 20 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பேசினார்.
9 வது வார்டு துறைமங்கலம் 3 ரோடு, 8 வது வார்டு 4 ரோடு, மின்நகர், சிலோன் காலனி, தீரன் நகர் 21 வது வார்டு துறைமங்கலம் TELC பள்ளி, 11 வது வார்டு கே.கே.நகர், அரசு குடியிருப்பு வளாகம், 10 வது வார்டு பங்களா பேருந்து நிறுத்தம், 7 வது வார்டு ராஜா நகர், ரெங்கம்மாள் நகர், 6 வது வார்டு புதிய பேருந்து நிலையம், 20 வது வார்டு வெங்கடேசபுரம், 19 வது வார்டு சங்குப் பேட்டை, 5 வது வார்டு மதனகோபாலபுரம், 4 வது வார்டு ரோவர் பள்ளி எதிரில், 3 வது வார்டு ரோஸ் நகர், 12 வது வார்டு எளம்பலூர் சாலை, ராம் தியேட்டர், 13 வது வார்டு காமராஜர் வளைவு, 1 வது வார்டு வடக்கு மாதவி சாலை, 2 வது வார்டு சாமியப்பா நகர்,முல்லை நகர்,முஸ்தபா நகர் பகுதிகளில் இன்று தீவிர பரப்புரை மேற்கொண்டனர்.
வார்டு வாரிய சென்ற திமுகவினர் பொதுமக்களிடம் வாக்குகனை சேகரித்தனர். அப்போது தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், மாவட்ட மகளிரணி மகாதேவி ஜெயபால், நகராட்சி துணைத் தலைவர் ஆதவன், உள்ளிட்ட நகராட்சி வார்டு உறுப்பினர்கள், மதிமுக மாவட்ட செயலாளர் ஜெயசீலன், காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கூட்டணியை சேர்ந்த கட்சியினர் பலர் உடனிருந்தனர். ஓட்டு கேட்டு சென்ற ஜெயலட்சுமிக்கு பொதுமக்கள், கட்சியினர் ஆரத்தி எடுத்தும், மலர்மாலை அணிவித்தும் வரவேற்றனர்.








kaalaimalar2@gmail.com |
9003770497