To provide Kaveri drinking water to the neikkuppai village: the assertion of the Communist Party!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள நெய்குப்பை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக நெய்குப்பையில் கிளைச் செயலாளர் சி.பாரதியும். மரவநத்தம் கிராமத்தில் கிளைசெயலாளர் கே.காசிராஜன் ஆகியோர் கொடி ஏற்றி தொடங்கி வைத்தனர். பொதுக்கூட்டத்திற்கு வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் எ.முருகேசன் தலைமை வகித்தார்.

நிர்வாகிகள் மனோஜ்குமார், சி.கோவிந்தன், அண்ணாமலை, எஸ்.விஜயகுமார், டி.அறிவழகன், எஸ்.செங்கமலை, என்.வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில செயற்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்ட செயற்குழு ஆர்.அழகர்சாமி, எ.கலையரசி, எஸ்.அகஸ்டின், கரும்பு விவசாயிகள் சங்கம் ஏ.கே.ராஜேந்திரன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஒன்றிய செயலாளர் எ.முருகேசன் கட்சி நிதியாக 42 ஆயிரம் ரூபாயை மாநிலக்குழு எம்.சின்னதுரையிடம் வழங்கினார்.

சின்னமுட்லு அணை திட்டத்தை உடனே தொடங்க வேண்டும், திருவாலந்துரை – சின்னக்கல்பூண்டி இடையில் உள்ள வெள்ளாற்றில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும், நெய்குப்பை கிரமத்தில் காவேரி கூட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மரவநத்தம் கிராமத்தில் கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுத்தி பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!