To the foreman who did not wear a mask, the Thasildhar who imposed the fine; Excitement as TNEB employees gather to protest!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே தாசில்தார் சரவணன் இன்று காலை 9 மணியளவில் வாகன சோதனை செய்து கொண்டிருந்த போது, அவ்வழியே மோட்டார் சைக்களில் வந்த நபர் முகக்கவசம் அணியாமல் தலைக்கவசம் மட்டும் அணிந்திருந்ததால், அவருக்கு தாசில்தார் மாஸ்க் அணியததற்கு ரூ. 200 அபராதம் விதித்தார்.
மோட்டார் சைக்களில் வந்த நபர், பேரளி துணை மின்நிலையத்தில், ஃபோர்மேனாக பணியாற்றி வருவதாவும் அவருடைய பெயர் நாராயணன் எனவும் தெரிவித்தார். தனக்கு அபராதம் விதிக்கக்கூடாது என்றும், மேலதிகாரியின் ஊரடங்கு கால அனுமதி கடிதத்தை காட்டியுள்ளதாகவும் அதை தாசில்தார் பார்க்கமல் அலட்சியம் காட்டியதால், இது குறித்து அவரது சங்க உறுப்பினர்களிடம் தெரிவித்தார். பின்னர் சிஐடியூ மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள் புதிய பேருந்து நிலையம் எதிரே ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
இதனிடையே தாசில்தார் சரவணன், பெரம்பலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன், பெரம்பலூர் பொறுப்பு ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
சட்டப்படி தலைக்கவசம் அணிந்தாலும், முகக்கவசம் அணிய வேண்டும்.