To the teacher who went on the moped, the gold chain flush: the police trap for mysterious people!

கற்பனை காட்சி
பெரம்பலூர் மாவட்டம், சத்திரமனை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ஆனந்தி (வயது 39), வேலூரில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் இன்று சொந்த வேலையாக பெரம்பலூர் வந்து விட்டு மீண்டும் ஊருக்கு மொபட்டில் சத்திரமனை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, சத்திரமனை அருகே உள்ள கருத்தான் நடராஜ் என்பவரின் வயல் அருகே ஆனந்தியின் வண்டிக்கு பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் ஆனந்தி அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க நெக்லசை பறித்துக் கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஆனந்திக்கு நெற்றி மற்றும் இடது காலில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. இது குறித்து ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களைள பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.