To Vijayakanth DMDK leader, issued a Perambalur the court warrant
தமிழக முதமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் இருந்து வந்ததற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பெரம்பலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.
தமிழக முதலைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் இருந்து வந்ததற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பெரம்பலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.
கடந்த 14.08.2012-ம் ஆண்டு விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூரில் நடைப்பெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் 23.011.12-அன்று அரசு தலைமை வழக்கறிஞர் குலோத்துங்கன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.வழக்கில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் இருந்து வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி நஷிமாபானு உத்தரவிட்டார்.