Toll free numbers for CoVid-19 related suspicions: Collector Notice!
பெரம்பலூர் கலெக்டர் வெங்டபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் கோவிட்-19 கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை மற்றும் அனைத்து துறைகளின் ஒத்துழைப்புடன் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் கோவிட்-19 கொரோனா நோய் சம்மந்தமாக ஏற்படும் சந்தேகங்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் உள்ள 1077, 9154155097 மற்றும் 18004254556 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 104 என்ற கட்டணமில்லா தொலைபேசியையும் தொடர்பு கொள்ளலாம்.
எனவே பொதுமக்கள் யாருக்காவது சளி, இருமல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் சுவை அறியாத தன்மை, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அவர்கள் தாமதிக்காமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளை அணுகவும். அங்கு அவர்களுக்கு தேவையான சிகிச்சையும் கொரோனா சம்மந்தமாக பரிசோதனைகளும் இலவசமாக செய்து கொடுக்கப்படும். பொதுமக்கள் சாதாரண சளி, இருமல் என்று அலட்சியம் காட்டாமல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகவேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே வரவேண்டும். தனி நபர் சமுதாய இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவ்வப்போது கை மற்றும் முகத்தை சோப்பு கொண்டு கழுவுதல் வேண்டும். இதனை பொதுமக்கள் தவறாமல் கடைபிடித்து கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொண்டும் மற்றும் தமிழ்நாடு அரசு எடுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கிடவேண்டும் என தெரிவித்துள்ளார்.