Tomorrow’s general strike, the union campaign for support in Perambalur
பெரம்பலூர் : காலிப்பணியிடங்களை நிரப்பவும் 8 வது ஊதிய மாற்றத்திற்கான குழு அமைத்திடவும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவும், அவுட்சோர்சிங் முறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிநியமணம் செய்ய வலியுறுத்தியும், அரசுத் துறைகளை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்தவும்,
வருமான வரி உச்சவரம்பை உயர்த்தவும், மாநில அரசு ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், தினக்கூலி, தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை (செப். 2) நாடு முழுவதும் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தரக்கோரி CITU, LPF, HMS, AITUC உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் பெரம்பலூர் நான்குரோடு, புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், துறைமங்கலம் பகுதிகளில் பிரச்சாரம் செய்து துண்டு பிரசுரங்களை வழங்கினர். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி, விவசாயிகள் சங்கம் என்.செல்லதுரை, ஏஐடியுசி தியாகராஜன், ஹெச்எம்எஸ் சின்னசாமி ஜனநாயக வாலிபர் சங்கம் எஸ்பிடி ராஜாங்கம், சிஐடியு அகஸ்டின், இராஜகுமாரன், கணேசன், முத்துசமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.