தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலாளர் அறிவுரைப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் நோக்கத்தில் வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவாகி உள்ளதை கண்டறிந்து நீக்கம் செய்யவும், இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யவும் வாக்குசாவடி அளவில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்டியல் வாக்காளர் பதிவு அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் விளம்பர பலகையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியரக இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
26.02.2016 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை நடத்தி பெயர் நீக்கப்பட்டவர்களின் பட்டியல் வாசித்து காண்பிக்கப்பட உள்ளது.
இப்பட்டியலில் ஆட்சேபணை இருந்தால் வாக்காளர் பதிவு அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும்; தகவல் தெரிவிக்கலாம்.