Traditional Seed Festival in Perambalur! Farmers and public enjoyed watching!!
பெரம்பலூர் மாவட்ட இயற்கை உழவர்கள் குழு சார்பில், பாரம்பரிய விதைத்திருவிழா பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது.
இதில், பெரம்பலூர், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து, திராளான இயற்கை விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள், மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தியாளர்கள், இயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுனி உள்ளிட்ட தானியங்கள், பல்வேறு பழையான அரிசி ரகங்கள், விதை நெல் , பருப்பு வகைகள், மூலிகை பொருட்கள், அவல், அழகு சாதன பொருட்கள், பானகங்கள், பலகாரங்கள், முளைகட்டிய பயிர் ரகங்கள், வெல்லம், நாட்டு சக்கரை, காய்கறி விதைகள், கருப்பு உளுந்து, கருப்பு மக்காச்சோளம், இயற்கையாக ரசாயனம் கலப்படம் இல்லாத கொசுவிரட்டி, உடல் வலி போக்கும் தைலங்கள், பற்பசைகள், உழவாரக் கருவிகள், காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்ட்டு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு, கருப்புகவுனி அரிசியில் தயாரிக்கப்பட்ட களி சாம்பாருடன் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
உழவர்கள், பொதுமக்கள், வேளாண்மை படிக்கும் மாணவர்கள், சிறுவர்கள், மாடிவீட்டு தோட்டம் அமைப்பவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவில் விவசாயிகள் இயற்கை வேளாண்மையில், அதிக மகசூல் பெறுவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.