Tribute to Perambalur Collector’s Office Lift: Toward Compromised MP Chandirakasi

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காட்டை சேர்ந்தவர் ஷாகுல்ஹமீது. மாற்றுத்திறனாளியான இவர் பல முறை மாவட்ட ஆட்சியர்களிடம், அலுவல் தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் அலுலகத்தில் உள்ள முதல் மற்றும் இரண்டாம் தளங்களுக்கு செல்ல படிக்கட்டில் ஏறி இறங்குவதற்கு உடல் ரீதியாக கடும் அவதிப்படுதாக பல முறை மனு கொடுத்துள்ளார். இது குறித்து செய்திகளும் வெளியாகி உள்ளன.

தன்னை போன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மாற்றுத் திறனாளிகள் துன்பம் அடையாக் கூடாது என்பதற்காக மனு கொடுத்தும் பயனில்லை. தினமும் ஆட்சியர் பணிக்கு வரும் லிப்ட் இருக்கும் வழியாத்தான் செல்கிறார். ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் லிப்ட் செயல்பட நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள லிப்டிற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கிருந்த போலீசார் ஷாகுல்ஹமீதிடம் விசாரித்த போது சிதம்பரம் தொகுதி எம்.பி சந்திரகாசி அங்கு வந்தார். ஷாகுல்ஹமீதிடம் எம்.பி சந்திரகாசி விசாரித்தார். எம்.பியிடம் ஷாகுல்ஹமீது தெரிவித்ததாவது: மாற்றுத்திறனாளியான தான் ஆட்சியர் அலுவலத்தில் உள்ள இரண்டு மாடி கட்டிடங்களுக்கும் படிகளில் சென்று வருவதற்குள் சோர்வடைந்து மிகவும் களைப்படைந்து விடுகிறேன். அதனால் என்னால், மற்ற பணிகளுக்கு செல்ல முடியமால் கடும் சிரமப்படுகிறேன். ஆனால் இது குறித்து ஆட்சியர்களிடம் மனு கொடுத்தும் இது நாள் வரை நடவடிக்கை எடுக்கால் அலட்சியம் காட்டி வருகின்றனர். அதனால் லிப்டிற்கு மாலை அணிவித்து லிப்ட் செயல்படும் வரை அங்கேயே தங்கி போராட்டம் செய்யப்போவதாக தெரிவித்தார்.

பின்னர், இரு நாட்களுக்குள் லிப்ட்டை சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக சிதம்பரம் தொகுதி எம்.பி சந்திரகாசி கொடுத்த உறுதியின் பேரில் ஷாகுல்ஹமீது அங்கிருந்து போராட்டத்தை கைவிட்டு ஆட்சியர் அலுவலத்தை விட்டு வெளியேறினார். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பாக இருந்தது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!