TVK leader Vijay, who missed the timing in his first campaign; cancelled the event in Perambalur! Unable to speak, he turned back on the way. Children and women who were eagerly waiting were disappointed! Will a police case be registered?

பெரம்பலூருக்கு அனுமதி பெற்ற நேரத்தில் இருந்து 8 மணி நேரத்திற்கு மேல் தாமதமாகியும், தவெக தலைவர் வராமல் பாதியிலேயே திரும்பி சென்றதால், கால்கடுக்க காத்திருந்த குழந்தைகள், பெண்கள், ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் கலைந்து சென்றனர்.

தவெக தலைவர் விஜய் மக்களை சந்திக்கும், முதல் பிரச்சாரம் திருச்சியில் நேற்று காலை தொடங்கி அரியலூர், குன்னம், பெரம்பலூரில் ”உங்க விஜய் நா வரேன்” என பிரச்சாரம் செய்ய இருந்தார்.

அரியலூரில் போலீசில் அனுமதி பெற்ற நேரத்திற்கு தவெக தலைவர் விஜய் வந்து நேரமுடியவில்லை. வழிநெடுகிலும், பெண்கள், குழந்தைகள் வரவேற்பை பெற்று வந்தார். அனுமதி பெற்ற இடத்திற்கு வந்து சுமார் 15 நிமிடத்திற்கு மேல் பேசினார். அங்கிருந்து புறப்பட்ட தலைவர் விஜய், பெரம்பலூர் மாவட்டம் குன்னத்திற்கு வந்த போது இரவு 10 மணிக்கு மேலாகிவிட்டதால், அங்கிருந்து கையசைத்து சென்றார். வழிநெடுக பேரளி, கவுள்பாளையம், பெரம்பலூர் 4 ரோடு, காமராஜர் வளைவு, வெங்கடேசபுரம், மதனகோபாலபுரம், சங்கு, கடைவீதி பகுதிகளில் குழந்தைகள், பெண்கள், ரசிகர்கள், அக்கட்சியின் தொண்டர்கள் ஆர்வத்துடன் மதியத்தில் இருந்து தயாராகி காத்திருந்தனர். ஆனால், விஜய் நேற்றிரவு 10 மணிக்கு புறப்பட்ட தலைவர் விஜய் பெரம்பலூரில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு சுமார் நள்ளிரவு 12.30 மணியாகியும் வந்தடையவில்லை. நள்ளிரவு நேரமாகியும், மதியம் தொடங்கிய புள்ளிங்கோக்களின் பைக் உறுமல் சத்தம் நின்றபாடில்லை. நள்ளிரவு வரை சாலையில் இதோ வரார், அதோ வரார் வந்து விட்டார் என அலப்பறை செய்து கொண்டிருந்தனர்.

நள்ளிரவு வரை காத்திருந்தும் தங்கள் தலைவர் விஜய் வராததால் மனமுடைந்த ரசிகர்கள், குழந்தைகள், பெண்கள், கட்சியினர் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

ஒரு தலைவர் திட்டமிடலுடன் காலத்தையும் கையாள தெரிந்திருக்க வேண்டும். தவெக தலைவரின் முதல் பிரச்சாரம் முழுமை அடையாமல் போய்விட்டது. இது பெரம்பலூர் மாவட்டத்தில், எதிர்கட்சிகளுக்கு பேசு பொருளாகவும், கொண்டாட்டமாகவும் அமைந்துவிட்டது. மேலும், விதிமீறலுக்காக தவெக தலைவர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்கிறாதா? என்பது விடிந்தால் தான் தெரியும்!!


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!