Udayanithi Stalin and ministers, MPs, MLAs, party pay tribute to A.Raja’s wife Parameswari’s death!

முன்னாள் மத்திய அமைச்சரும்,கழக துணை பொதுச் செயலாளருமான ஆ. இராசா,எம்.பி.யின் மனைவி மு.அ.பரமேஸ்வரி அவர்கள் 29.05.2021 சனிக்கிழமை இரவு 7.00 மணியளவில் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் காலமானார்.

பரமேஸ்வரி உடல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் கிராமத்தில் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.
மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு.எம்.பி. அமைச்சர்கள் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை எஸ். எஸ்.சிவசங்கர், பத்திரப்பதிவு மற்றும் வணிக வரி துறை அமைச்சர் பி.மூர்த்தி, திருச்சி சரக டி.ஐ.ஜி.ஆனிவிஜயா, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கட் பிரியா, போலீஸ் எஸ்.பி. நிஷா பார்த்திபன், டி.எஸ்.பி சரவணன், தென் சென்னை மத்திய மாவட்ட பொருளாளர் கென்னடி, எம்.எல்.ஏக் ஷ்கள் பெரம்பலூர் ம.பிரபாகரன், ஜெயங்கொண்டம் கா.சொ.க.கண்ணன், அரியலூர் கு.சின்னப்பா, திருச்சி கிழக்கு இனிக்கோ இருதயராஜ் , முசிறி காடுவெட்டி தியாகராஜன், லால்குடி செளந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின்குமார், திருவையாறு சந்திரசேகர், தஞ்சாவூர் டி.கே.ஜி. நீலமேகம், பூம்புகார் நிவேதாமுருகன், கள்ளக்குறிச்சி வசந்தம் கார்த்திகேயன்,
தொ மு.ச.பேரவை பொதுச்செயலாளர் மு. சண்முகம் எம்.பி., பெரம்பலூர் திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன், பொறியாளர் பரமேஷ்குமார், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, வி.எஸ்.பெரியசாமி, டாக்டர் செ. வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், தமிழ்நாடு பார் அசோசியேஷன் முன்னாள் தலைவர் வழக்கறிஞர் சந்திரமோகன், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பிரபா, தலைமை கழக வழக்கறிஞர் கிரிராஜன், முன்னாள்எம்.எல்.ஏ ம. இராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கி. முகுந்தன், ந.ஜெகதீஸ்வரன், பட்டுச்செல்விராஜேந்திரன், சிவக்குமார், ஒன்றிய பெருந்தலைவர்கள் மீனாஅண்ணாதுரை, பிரபாசெல்லப்பிள்ளை, க.ராமலிங்கம், துணை பெருந்தலைவர்கள் சாந்தாதேவிகுமார், எம்.ரெங்கராஜ்,
ஒன்றிய கழகச் செயலாளர்கள் எஸ்.அண்ணாதுரை, எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் வீ.ஜெகதீசன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன், பேரூர் கழகச் செயலாளர்கள் ஆர்.ரவிச்சந்திரன்,சேகர், ஜாகிர் உசேன், வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து. ஹரிபாஸ்கர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர்.முருகேசன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி (எ) அப்துல் பாரூக், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் ப. செந்தில்நாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சன். சம்பத், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் க. ரமேஷ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், சரோஜினி தங்கராசு குடும்பத்தினர்கள், லட்சுமி மருத்துவமனை டாக்டர்கள் கருணாகரன், ஜெயலட்சுமி, மாவட்ட சிறுபான்மை துணை அமைப்பாளர் ஒஜீர், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் வனிதா சுப்பிரமணியன், கிறிஸ்டியன் கல்வி நிறுவனங்கள், டான் அறக்கட்டளை நிறுவனர் எம்.கிறிஸ்டோபர் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆ.இராசாவின் மகள் மயூரி, அவரது சகோதரர்கள் ஆ.ராமச்சந்திரன், ஆ.கலியபெருமாள், ஆ.சிவசண்முகம் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் அண்ணண் ஆ.இராசா அவர்களின் மனைவி அக்கா பரமேஸ்வரி அவர்கள் நேற்று இரவு நம்மை விட்டு பிரிந்து விட்டார். ஆ.இராசா அண்ணன் அவர்களுக்கும், உறவினர்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய இழப்பு . எங்கள் குடும்பத்தில் ஒருவராக விளங்கியவர் பரமேஸ்வரி அவர்கள். ஆ.இராசா அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், என கூறினார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for NEWS - Kalaimalar.

error: Content is protected !!