Umanath 15th state conference of the Organization of the Memorial Torch EB Staff in the Perambalur district met with applause

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு 15 வது மாநில மாநாடு ஆகஸ்ட் 13, முதல் 16 ஆம் தேதி வரை திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.

citu-perambalur அதனை முன்னிட்டு ஆர்.உமாநாத் நினைவு ஜோதி பயணம் மாநில துணைத் தலைவர் ஆர்.குருவேல், மாநில செயலாளர் எஸ்.வண்ணமுத்து, ஆகியோர் தலைமையில் ஆக.10 அன்று குமரியில் புறப்பட்டு திருச்செந்தூர், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், திருச்சி வழியாக ஆக.12 இன்று பெரம்பலூர் வந்தது.

புதியபேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு பெரம்பலூர் வட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார்,

கோட்ட செயலாளர் எம்.பன்னீர்செல்வம் வரவேற்றார். சிபிஎம் மாவட்ட செயலாளர் மணிவேல், சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு எ.கணேசன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கோட்ட துணைத் தலைவர்கள் காசிநாதன் (அரியலூர்) , பி.நாராயணன் (பெரம்பலூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்ட பொருளாளர் கே.கண்ணன் நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!