Unemployed youth may apply for a loan to start a business – Collector Information

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் UNEMPLOYED YOUTH EMPLOYMENT GENERATION PROGRAMME [UYEGP] திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கடனுதவி பெற்று தொழில் தொடங்க www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். வயது வரம்பு பொது பிரிவினா; 18 முதல் 35 வயது வரையிலும் சிறப்பு பிhpவினர் மற்றும் பெண்கள் 18 முதல் 45 வயதுக்குள் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,50,000-க்குள் இருக்க வேண்டும்.

உற்பத்தி பிரிவில் ரூ.10 இலட்சம் வரையிலும், சேவைப்பிரிவில் ரூ.3 இலட்சம் வரையிலும், வியாபாரங்களுக்கு ரூ.1 இலட்சம் வரையிலும் கடன் பெறலாம். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமாக அதிகபட்சமாக ரூ.1,25,000- வரை தமிழக அரசு வழங்கும்.

திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினர் 10 சதவீதமும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் இராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர் மகளிர் மற்றும் திருநங்கைகள் 5 சதவீதமும் தமது பங்காக செலுத்த வேண்டும்.

பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கு திட்டத்தின் கீழ் PRIME MINISTER’S EMPLOYMENT GENERATION PROGRAMME[PMEGP] திட்ட மதிப்பீட்டில் ரூ.10 லட்சத்திற்கு மேல் உற்பத்தி பிரிவிலும், ரூ. 5 லட்சத்திற்கு மேல் சேவை பிரிவின் கீழும் பயன்பெற http://www.kviconline.gov.in, என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் செய்வோர் குறைந்த பட்சம் 8- ம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் உற்பத்தி சார்ந்த தொழில் தொடங்க அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையிலும் கடன் பெறலாம். நகர்புறங்களில் மானியம் 25 சதவீதமும் கிராமப்புறங்களில் மானியம் 35 சதவீதமும் மானியம் மத்திய அரசால் வழங்கப்படும்

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் NEW ENTREPRENEUR -CUM=ENTERPRISE DEVELOPMENT SCHEME திட்டத்தின் கீழ் முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்க www.msmeonline.tn.gov.in/needs, என்ற இணையதள முகவாpயில் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்திகீழ் பயன்பெற கல்வித் தகுதியாக ஏதேனும் பட்டம், பட்டயம் பெற்று இருக்க வேண்டும். வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது முடித்தவா;கள் பொதுப்பிhpவினா; 35 வயது முடியவும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்கள் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் அதிகபட்சம் ரூ.1 கோடி வரையிலும் உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்கள் தொடங்கலாம். திட்டத் தொகையில் 25 சதவிதம் அதிகபட்சம் ரூ.25 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

மேலும் 3 சதவீதம் வட்டி மானியம் ஆகியவை தமிழக அரசால் வழங்கப்படும். திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினா; 10 சதவீதமும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்னையினர், முன்னாள் இராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர் மகளிர் மற்றும் திருநங்கைகள் 5 சதவீதமும் தமது பங்காக வங்கிக்கு செலுத்துதல் வேண்டும்.

மேற்கண்ட திட்டங்கள் தொடர்பாக ஊக்குவிப்பு முகாம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் 26.10.2017 அன்றும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் 10.10.2017 அன்றும், ஆலத்தூh; ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் 12.10.2017 அன்றும் பெரம்பலூர் மாவட்ட தொழில் மைய அலுவலக கூட்ட அரங்கில் 24.10.2017 அன்றும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தந்த வட்டாரங்களை சேர்ந்த நபர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் அணுகி விபரம் பெற்றுக்கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!