“Ungalai Thedi Ungal Oorul in Perambalur Taluck ; Collector’s information!

தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வட்ட அளவில் பிரதி மாதம் 3வது புதன்கிழமை கலெக்டர் மற்றும் அனைத்து மாவட்ட முதல்நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வுசெய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் மார்ச்-2025 மாதம் மூன்றாவது புதன்கிழமை (19.03.2025) “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் முகாமானது நடைபெறும்.

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி மக்களைச்சென்று அடைவதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் எதிர்வரும் 19.03.2025 புதன்கிழமை அன்று பெரம்பலூர் கலெக்டர் மற்றும் அனைத்து மாவட்ட முதல்நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்தும் மனுக்களைப் பெறவுள்ளனர். அதுசமயம், பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ளவரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் மற்றும் தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளையும் மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!