Unhealthy Perambalur weekly market : Officials ignored
பெரம்பலூர் நகரில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமையும் வாரச் சந்தை வடக்கு மாதவி சாலையில் உள்ளது. வாரச்சந்தையில் விவசாயிகள் மற்றும் சுற்றுக்கிராம விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழ வகைகள் குழந்தைகள் திண்பன்டங்கள் உள்பட விற்பனை செய்யப்பபட்டு வருகின்றன. அங்கு விற்கப்படும் பொருட்களை வாங்கி பொதுமக்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர்.
தற்போது வாரச்சந்தை நடைபெற்று வரும் இடத்தில் மழைநீர் தேங்கியும், சுற்றுப்பகுதி குப்பை கொட்டும் இடமாகவும் மாறி கொசு உற்பத்தியாகும் இடமாகவும் மாறி வருகிறது.
நகராட்சி சார்பில் பெயரளவிற்கே பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு விற்பனைக்கு வியாபாரிகள் கொண்டு வரும் பொருட்களை தரையில் சாக்கு விரித்து, அதில் கொட்டி வைத்து பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
அங்கு போதிய சுத்தம் சுகாதாரம் பேணப்படாததால் , ஈ, கொசு உள்ளிட்ட நோய் பரப்பும் பூச்சி மற்றும் கிருமிகளால் விற்பணை செய்யும் பொருட்களில் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இடநெருக்கடியால் அங்கு வரும் பொதுமக்கள் பொருட்களை பார்த்துக்கொண்டே தரையில் வழுக்கி விழும் நிலை உள்ளது. சந்தை நடைபெறும் நாட்களில் வடக்கு மாதவிரோடு குறுகிய சாலையாக உள்ளதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மாலை முதல் இரவு வரை அப்பகுதி மக்கள் சென்று வர அவதிப்படுகின்றனர்.
சந்தையில் சுகாதாரம் பேணுவதோடு பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.