Unidentified vehicle kills unidentified young men near Perambalur
பெரம்பலூர் மாவட்டம், எசனை ஆரம்ப சுகாதார நிலையம் முன்புறம், பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் நேற்று இரவு 11 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே, சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பலியானார்.
இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பலியான வாலிபர் மஞ்சள் நிறத்தில் வேட்டி துண்டு அணிந்திருந்தார். உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு வாலிபரின் உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.