union leader campaign support to Perambalur DMK candidate Prabhakaran

பெரம்பலூர் திமுக வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து பொம்மனப்பாடி, சத்திரமனை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக விவசாய தொழிலாளர்கள் கட்சியின் தலைவரும், கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாநிலதலைவருமான பொன்.குமார் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தாவது:

தமிழக விவசாய தொழிலாளர்கள் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலை பொறுத்த மட்டில் ஜனநாயகத்திற்கும், பணநாயகத்திற்கும் நடக்கும் போட்டியாகத்தான் இதை மக்கள் பார்க்கிறார்கள்.

அதிமுக பாஜக கூட்டணி அதிகாரத்தையும், பணபலத்தையும் மட்டுமே நம்பி இந்த களத்தில் இருக்கிறது. ஆனால் திமுக கூட்டணி 10 ஆண்டு கால தொலைநோக்கு சிந்தனையோடு மக்களை நம்பி நிற்கிறது. கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திமுக ஆட்சிக் காலத்தில் 17 வகையான நலவாரியம் செயல்பட்டு வந்தது. ஆனால் அவை தற்போது செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது. சிமெண்ட் விலை, இரும்பு உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் கட்டுமான பணி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு கோடி பேர் வேலை கேட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். ஆனால் அதிமுக ஆட்சியில் வேலை கொடுக்க முடியவில்லை. சுண்ணாம்பு முதல் சுடுகாடு வரை அனைத்து டெண்டர்களிலும் ஊழல் நடந்துள்ளது. ஸ்டாலினை பார்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் பச்சோந்தி என்று கூறுகிறார். ஆனால் பாமக ராமதாஸ் தான் பச்சோந்தி. 10 ஆண்டுகளாக பாழ்ப்ட்ட இந்த தமிழகத்தை தூக்கி நிறுத்த ஸ்டாலின் போராடுகிறார். இட ஒதுக்கீடுக்கு எதிரான கட்சி பாஜக – அ.தி.மு.க கூட்டணி. தேர்தலுக்கு பிறகு அதிமுகவிற்கு எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும். பாஜக கலாச்சாரம் குதிரை பேரம், ரெய்டு மூலம் மிரட்டல் ஆகும். அதே பாணியில் தற்போது திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த செயல் வண்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 32 லட்சம் பேர் உள்ளனர். ஆனால் 11 லட்சம் பேருக்கு மட்டுமே பொங்கல் போனஸ் வழங்கி விட்டு, மீதமுள்ள பணத்தை சுருட்டி விட்டனர். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ஆதரித்த அதிமுக அரசு எப்படி மும்முனை மின்சாரம் வழங்கும், பச்சை துண்டு போட்டுக் கொண்டு முதல்வர் எடப்பாடி விவசாயிகளை ஏமாற்றி வருகிறார். இந்த தேர்தலில் 234 தொகுதிகளில் திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என தெரிவித்தார். பேட்டியின்போது மாநில பொதுசெயலாளர் அழகேசன், மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!