Urban Local Elections – Draft Polling List; Collector consults with political parties in Perambalur!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல்களின் வரைவு வாக்குச்சாவடி பட்டியல், தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோருடனான கலந்தாலோசனைக் கூட்டம் கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் தெரிவித்தாவது:

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, 2021 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடிப் பட்டியல்கள் உள்ளாட்சி அமைப்புகளில் 07.11.2021 அன்று நகராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் தொடர்புடைய வார்டுகளிலும் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக 08.11.2021-க்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோருடனான கலந்தாலோசிப்பதற்கான கூட்டம் நடத்தப்பட்டு ஆட்சேபனைகள், கருத்துகள் இருப்பின் பரிசீலனை செய்து தேவைப்படின் நிறைவான வாக்குச்சாவடி பட்டியல்களுக்கு உரிய திருத்தங்கள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறைவு செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியல்களை இன்று வெளியிடவும் மற்றும் விளம்பரப்படுத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் மொத்தம் 86 பதவியிடங்கள் உள்ளன. இவற்றில் 5 தலைவர் பதவியிடங்களுக்கான தேர்தல் மறைமுகத் தேர்தலாகவும், 81 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் நேரடி தேர்தலாகவும் நடைபெறும். இவற்றில் பெரம்பலூர் நகராட்சி வார்டு உறுப்பினர் 21 பதவியிடங்கள், நான்கு பேரூராட்சி வார்டு உறுப்பினர் 60 பதவியிடங்களுக்கு மக்கள் பிரதிநிதிகளை நேரடி தேர்தல் மூலமாக தேர்வு செய்ய வேண்டியுள்ளது.

பெரம்பலூர் நகராட்சியில் 20,727 ஆண் வாக்காளர்களும், 22,179 பெண் வாக்காளர்களும், 5 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 42,911 வாக்காளர்களும், அரும்பாவூர் பேரூராட்சியில் 5,211 ஆண் வாக்காளர்களும், 5,628 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளர் என மொத்தம் 10,840 வாக்காளர்களும்,

குரும்பலூர் பேரூராட்சியில் 5,301 ஆண் வாக்காளர்களும், 5,620 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 10,921 வாக்காளர்களும், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் 5,039 ஆண் வாக்காளர்களும், 5231 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளர் என மொத்தம் 10,271 வக்காளர்களும், பூலாம்பாடி பேரூராட்சியில் 4,267 ஆண் வாக்காளர்களும், 4,499 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 8,766 வாக்காளர்களும் ஆக மொத்தம் 40,545 ஆண் வாக்காளர்கள், 43,157 பெண் வாக்காளர்கள், 7 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 83,709 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவுரைகளின்படி ஒரு வாக்குச்சாவடிக்கு வாக்காளர்களின் எண்ணிக்கை வரம்பு 1200 என்ற அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் 112 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரம்பலூர் நகராட்சி பகுதியில் உள்ள 21 வார்டுகளில் 19 ஆண் வாக்குச்சாவடிகள், 19 பெண் வாக்குச் சாவடிகள், அனைத்து வாக்காளர் 12 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 50 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 4 பேரூராட்சி பகுதிகளில் 2 ஆண் வாக்குச்சாவடிகள், 2 பெண் வாக்குச் சாவடிகள், 58 அனைத்து வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடிகளும் என ஆக மொத்தம் 81 வார்டுகளில், 21 ஆண் வாக்குச்சாவடிகள், 21 பெண் வாக்குச் சாவடிகள், 70 அனைத்து வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடிகளும் என 112 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்குச்சாவடிகள் குறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கருத்துக்களை உடனடியாக கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் தேர்தல் நேர்முக உதவியாளர் மோகன், லப்பைக்குடிக்காடு செயல் அலுவலர் சதீஸ் கிருஷ்ணன், குரும்பலூர் செயல் அலுவலர் மெர்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!