Venture near Perambalur: While the family was asleep, cupboard they broke into the house and robbed!

பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் அருகே உள்ள வரகுபாடியில் நள்ளிரவில் துணிகரமாக வீட்டில் புகுந்த கொள்ளைகள், ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை அள்ளி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரகுபாடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பரமசிவம், நேற்றிரவு காவல் காக்க வயலுக்கு சென்று விட்டார். அவரது மனைவி ராசம்மாள், தனியார் பள்ளி கம்பியூட்டர் ஆசிரியராக இருக்கும் மகன் மணிவேல் (35) வீட்டின் பின்புற தகர கதவை உள்புறமாக தாளிட்டு மணிவேல் மற்றும் அவரது அம்மா முன்புற வராண்டாவில் தூங்கியுள்ளனர். மணிவேல் அதிகாலை வீட்டிற்குள் செல்ல முயன்ற போது கதவு உட்புறமாக தாள் போடப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், பின்புறமாக சென்று பின் கதவை பார்த்த போது தகரகதவு திறந்து கிடந்தது. வீட்டினுள் சென்று பார்த்த போது, 5 அடி உயர பீரோ காணமல் போயிருந்தது தெரிய வந்தது. அதை தேடிய போது 50 மீட்டர் தொலைவில் ராமசாமி வயலில் பிரோ உடைக்கப்பட்டு கிடந்ததும், அதிலிருந்த நகை சுமார் 6 பவுன் தங்க நகைகள், ரொக்கப் பணம் ரூ.40 ஆயிரம் காணமல் போயிருப்பதும் தெரியவந்து. இது குறித்த புகாரின் விரைந்து வந்த மருவத்தூர் போலீசார் கைரேகை, தடயஅறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் தீவிரமாக ஈடுபட்டுள்னர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் எஸ்,எஸ்,ஐ சுந்தரராஜ் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்னர்.

வீட்டில் ஆட்கள் தூங்கி கொண்டு இருக்கும் போதே கொள்ளையர்கள் அலேக்காக பீரோவை சத்தமில்லாமல் எடுத்து சென்று கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!