பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே சாலையோரம் நடந்து சென்றவர் மீது மினிபஸ் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தழுதாழை கிராமம் தாழை நகரைச்சேர்ந்தவர் கரிகாலன்(33), இவர் நேற்று அப்பகுதி உள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி கொண்டு வீட்டை நோக்கி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணாபுரத்திலிருந்து கவுண்டர்பாளையம் நோக்கி சென்ற மினிபஸ் கரிகாலன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கரிகாலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த கரிகாலனின் உடலைக் கைப்பற்றி உடற்க்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விபத்துக்கு காரணமான மினிபஸ் டிரைவரான அரும்பாவூரை சேர்ந்த சின்னதம்பி(33) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.