Village administration officials demonstrated before Namakkal Collector office
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் வேலுசாமி முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் வரவேற்றார். இதில் கிராம நிர்வாக அலுவலங்களில் போதிய மின்வசதி, கழிப்பிட வசதி, பழுதான கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் தளவாடங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் வழங்கவேண்டும்.
அனைத்து வகையான இன்டர்நெட் வழி சேவைகளையும் சிறப்பாக வழங்கும் வகையில் இன்டர்நெட் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் உள்ளிட்ட வசதிகள் வழங்கவேண்டும். பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாவட்ட மாறுதல்களை ஒரே அரசாணை மூலம் உடனடியாக வழங்க வேண்டும்.
பங்கீட்டு ஓய்வூதிய முறைககு பதிலாக பழைய முறையிலான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைக வலியுறுத்தப்பட்டன. இதில் நாமக்கல் மா வட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விஏஓக்கள் கலந்துகொண்டனர்.