Virtual computer classroom at Kunnam Girls School: MLA R.T. Ramachandran inaugurated
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பில், அமைக்கப்பட்ட, மெய்நிகர் கணனி வகுப்பறைகளை குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி. ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி தலைமை வகித்தார். முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியர் பிரியா அனைவரையும் வரவேற்றார்.
குன்னம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ஆர்.டி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.4.50 செலவில் அமைக்கப்பட்ட கணணி வகுப்பறையை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து பேசியதாவது :
இந்த வகுப்பறை மூலம் கணினி வழியே மாணவர்கள் எளிதாக கணித பாடத்தினை கற்கும் வண்ணம் மென்பொருன் உருவாகப்பட்டு உள்ளதால் விளிம்பு நிலை மாணவணும் எளிதில் பாடம் கற்க முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் புதுவேட்டகுடி கூட்டுறவு சங்க தலைவரும், வேப்பூர் ஒன்றிய அதிமுக செயலாளருமான கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சில் குன்னம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் குணசீலன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சித்தளி நாகராஜ், குன்னம் இளங்கோவன், குன்னம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அமுதா முருகேசன், கிளை செயலாளர் ரெங்கநாதன், வக்கீல்கள் ராமசாமி, செந்தில்ராஜா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உதவி தலைமையாசிரியர் கருணாநிதி நன்றி கூறினார்.