volunteer who have been set up for Tamil development are invited to apply for “Tamil Semmal”


தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 25.07.2014 அன்று முன்னாள் முதலமைச்சரால் சட்டமன்றப் பேரவை விதி 110இன்கீழ் தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அமைப்பு வைத்து அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்தம் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் “தமிழ்ச் செம்மல்” என்ற விருதும் இவ்விருது பெறுபவர்களுக்கு ரூ.25,000- பரிசுத் தொகையும் தகுதியுரையும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இவ்விருது மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் (32 பேருக்கு) வழங்கப்படும். அவ்வகையில் 2018ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு மாவட்டங்களில் தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழ் அமைப்பு வைத்து அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருக்குரிய விண்ணப்பப் படிவம் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எனவே விண்ணப்பிப்பவர்கள் தன்விவரக் குறிப்பு, அவற்றுடன் நிழற்படம் இரண்டு, அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன் அந்தந்த மாவட்டத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 04.06.2018ஆம் நாளுக்குள் அளிக்கப்படவேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!