Voter List: Adding, Removal, Rehabilitation Camp: Perambalur Collector review

பெரம்பலூர் : இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி 01.01.2018 அன்று தகுதி நாளாக கொண்டு, 18 வயது பூர்த்தி அடைந்துள்ள (31.12.1999-க்கு முன்னர் பிறந்தவர்கள்) நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ரோவர் மேல்நிலைப் பள்ளி, ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 147, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 322 வாக்குச்சாவடிகளில் 1,37,890 ஆண் வாக்காளர்களும், 1,44,959 பெண் வாக்காளர்களும், இதரர் 13 வாக்காளர்களும் என மொத்தம் 2,82,862 வாக்காளர்கள் உள்ளனர்.

இதேபோல், 148, குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 316 வாக்குச்சாவடிகளில் 1,28,791 ஆண் வாக்காளர்களும், 1,30,882 பெண் வாக்காளர்களும், இதரா; 10 வாக்காளர்களும் என மொத்தம் 2,59,683 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும், 01.01.2018 அன்று தகுதி நாளாக கொண்டு, 18 வயது பூர்த்தி அடைந்துள்ள (31.12.1999-க்கு முன்னர் பிறந்தவர்கள்) நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட பணிகள் 03.10.2017 முதல் 31.10.2017 வரை அனைத்து வேலை நாட்களிலும் நடைபெற்று வருகின்றது.

அதனைத் தொடர்ந்து இன்று 22.10.2017 அனைத்து வாக்குச் சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு பயன்பெறலாம், என தெரிவித்தார்.

வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், நகராட்சி ஆணையர் முரளி, வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!