Welcome to DMK candidate SS Sivasankar from Kunnam constituency for women and children in the scorching 102 degree sun
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு திமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ் எஸ் சிவசங்கர், வேப்பூர் ஒன்றியத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினருடன் நேற்று காலை கொத்தவாசல் கிராமத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் நண்பகலில் துங்கபுரம் வந்த அவருக்கு கொளுத்தும் 102 டிகிரி வெயிலையும் பொருட்படுத்தாமல், 500க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் ஆரத்தி எடுத்து வரவேற்று, மலர்தூவி ஆசீர்வாதித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட வேட்பாளர் சிவசங்கர் பின்னர் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட கொரோனா நிவாரண நிதி 4 ஆயிரம், 100 நாள் வேலை திட்டத்தில் 150 நாட்களாக உயர்வு, பெண்களுக்கு உரிமை தொகையாக மாதம் 1000, ஓய்வுதியர்களுக்கு மாதம் ஓய்வுதியம் அதிகரிப்பு, அதோடு, சிறியவர்கள் பெண்கள் மாணவர்கள் முதியவர்கள் என அனைவருக்கும் திமுக தேர்தல் அறிக்கையில் சிறப்பு திட்டங்கள் உள்ளதாக தெரிவித்த அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு எதிர்க்கட்சியாக இருக்கும்போது தான் துங்கபுரம் பள்ளிக்கு சுற்று சுவர் மற்றும் சாலை மேம்பாட்டுகளை செய்து கொடுத்ததாகவும் வரும் ஆட்சியில் அனைத்து திட்டங்களையும் முழுமையாக கொண்டு வந்து கொடுப்பேன் என்றும் தெரிவித்தார். பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்தார். முன்னதாக சின்ன வெண்மணி, பெரிய வெண்மணி, தேனூர், கோவில்பாளையம், துங்கபுரம், கிளியபட்டு, காடூர், நல்லறிக்கை, புதுக்குடிசை, புதுவேட்டக்குடி, புதூர், துணிச்சப்பாடி, கொளப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் காங்கிரஸ், மதிமுக, தி.க, திமுக, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்தார். வேப்பூர் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சி .ராஜேந்திரன், ஊட்டி காபி பார் செல்லப்பிள்ளை, பட்டுச் செல்வி ராஜேந்திரன், உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம், கொளக்காநத்தம், அயினாபுரம், அணைப்பாடி, உள்ளிட்ட ஆலத்தூர் ஒன்றியங்களில் கட்சியனருடன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, ராகவன், புஜங்கராயநல்லூர் காட்டுராசா, உள்ளிட்ட கிளை செயலாளர்கள், பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.