What does it mean to say that we will destroy the party he started while keeping Anna as the leader? TVK Vijay, NTK Seeman’s question in Perambalur?

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேடுகளால் பாதிக்கப்படும் மாணவ மாணவியர்கள் மற்றும் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது :
தமிழ்நாடு அரசு பணிகளுக்காக தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தை ஒன்றை வைத்திருக்கிறது.
தமிழகத்தில் 75 லட்சம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். 55 லட்சம் பேர் விண்ணப்பத்து உள்ளனர். அதில் 29 லட்சம் பேர் பெண்கள். 284 பேர் மாற்று பாலினத்தவர். ஆனால், 3 ஆயிரத்து 937 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. இதற்கு 15 லட்சத்து 52 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். எவ்வளவு பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை எண்ணி பாருங்கள்! இந்த வேலையும் முறையாக தகுதி உள்ளவர்களுக்கு கிடைப்பதில்லை! இதில் ஏகப்பட்ட முறைகேடுகள், இடைத்தரகர்கள், தனியார் பேருந்தில் ஒரே ஒரு காவலர் பாதுகாப்பில் எடுத்துச் செல்லப்பட்ட கேள்வித்தாள் கசிவு! என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது.
கேள்வித்தாள்கள் முறையாக தயாரிக்கப்படவில்லை! ஆங்கில வழியில் எழுபவர்களுக்கு எளிமையாகவும் தமிழ் வழியில் எழுதுபவர்களுக்கு கடினமாகவும் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ன நோக்கத்திற்காக என்பது தெரியவில்லை! இந்த குளறுபடிகளால் நிறைய பாதிப்புகள் இருக்கிறது, இதனால் தேர்வு எழுதும் லட்சக்கணக்கானோர் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்!
பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் 12000 மட்டுமே என்ற போதிலும் அதற்காக 60,000 பேர் தேர்வு எழுதி வெளியில் காத்துக் கிடக்கின்றனர். 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் விதிமுறைகளின் படி வேற்று மாநிலத்தவர் 30 சதவீதம் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்ற பொது வாய்ப்பை அதிமுக அரசு அகற்றிவிட்டு யார் வேண்டுமென்றாலும் எழுதிக் கொள்ளலாம் என மாற்றியதன் காரணமாக தமிழர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்து சமய அறநிலைத்துறை மின்சார வாரியம் போன்ற துறைகளில் 7 லட்சம் முதல் 15 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு பணி அமர்த்தப்படும் அளவிற்கு ஊழல் பெருத்து விட்டது. இருக்கும் வாய்ப்போ ஆயிரக்கணக்கில் காத்திருப்பரோ பல லட்சக்கணக்கில்! ஓய்வூதியம் கொடுக்க காசு இல்லாததால் பனிக்காலத்தை 58 வயதிலிருந்து 60 வயதாக உயர்த்தி இருக்கிறார்கள். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நிதி இல்லை! இதன் காரணமாக படித்துவிட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
படித்துவிட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் பல லட்சம் இளைஞர்களுக்காக ஆதரவாகத் தான் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. 900 உதவி ஆய்வாளர்களுக்கான பணியிடங்களில் 400 பேர் முறைகேடாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதில் இட ஒதுக்கீடு முறையும் அமல்படுத்தப்படவில்லை! காசு வாங்கிக் கொண்டு போட்டுவிட்டார்கள்.
அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருக்கிற நிலையில் அந்த கோப்புகள் வெளியே வரக்கூடாது என அந்த அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே! இது தொடர்பாக நீதிமன்றங்களில்
நூற்றுக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், முறைகேடாக பணியிடம் பெற்ற 186 பேர் நீக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவும் அமல்படுத்தப்படவில்லை! தவறு என்றும் தெரிந்தும் கருணை அடிப்படையில் பணியில் நீடித்து வருகின்றனர்.
விஜய் உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சித் தலைவர்களைப் போல் மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு? தமிழ்நாடு என் நாடு என்றும் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது மக்களின் தேவைகள் என்ன என்பதை நான் அறிவேன் என்றும் இப்போது கூட என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியவில்லையா? நான் எழுதி வைத்து படிப்பவன் அல்ல! இதயத்தில் இருந்து பேசுகிறேன்.
75 ஆயிரம் பேர் வெளியிட்டு இருக்கிறார்களே! இதற்கு யார் காரணம்? யார் குற்றவாளி? இப்படி ஒரு அரசை தேர்ந்தெடுத்த நாங்கள் தான்! 25 ஆண்டு கால சிக்கலை களையாமல் யார் தூக்கி சுமந்தது? நாம் தான்! பொதுப் பிரச்சனைக்காக யாரும் முன் வருவதில்லை! தவறான ஒரு ஆட்சி நடக்குது என்றால் அது ஆட்சியாளன் பொறுப்பல்ல அதனை நிறுவியவர்கள் தான் பொறுப்பு என ஆபிரகாம் லிங்கன் கூறும் கருத்தை மேற்கோள் காட்டி பேசினார்.
இனிமேலாவது கொஞ்சம் பொறுப்புணர்வோடு நமக்கான சரியான தலைமையை தேர்வு செய்து, சரியான அதிகாரத்தை நிறுவவில்லை என்றால் அடுத்த தலைமுறையும் இதே போன்று வீதியில் நின்று போராட வேண்டியிருக்கும் என்றார்.
திமுக பிஜேபியை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும், பிஜேபி திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் மாறி மாறி பேசிக்கொண்டு இருக்கின்றனர் என்றார். முதல்வரின் சந்திப்புக்குப் பிறகு சீமான் திமுகவையோ, ஸ்டாலினையோ ஏன் விமர்சித்துப் பேசவில்லை என்று அனுப்பப்பட்ட கேள்விக்கு,
குறை சொல்கிறவர்கள் எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள்! திமுகவை எதிர்க்கும் போது ஆர்எஸ்எஸ் கைக்கூலி என்பார்கள், பிஜேபியை எதிர்க்கும் போது கிறித்துவ கைக்கூலி என்பார்கள்!
விஜயை நான் எதிர்க்கவில்லை! கேள்விதான் எழுப்புகிறேன் தம்பி! தான் என்னை எதிர்த்து எதிர்த்து பேசுகிறார் மேடையில், நான் கேள்வி தான் கேட்கிறேன்! பொதுவெளிக்கு வந்தால் அண்ணன் கேட்கிற கேள்விக்கு பதில் தான் சொல்ல வேண்டும் அதை தவிர்த்து என்னை ஏன் தவறு செய்தது போல் கேள்வி கேட்கிறீர்கள் என்றார்.
ஸ்டாலின் ஐயாவை பார்த்த பிறகு தான் பேசுகிறேன் என்றால் நீ மாநாட்டில் பேசிய பிறகு அடுத்த நாளே நவம்பர் 1 இல் நான் கேட்டேனே! அதை நீ பெட்டி வாங்கிக் கொண்டு தான் பேசினாய் என்பாயா?
கேட்பதற்கு பதில் சொல்ல வேண்டும் பிஜேபி உன் கொள்கை எதிரி என்றால் பண மதிப்பிழப்பிற்கு எதிராக ஏன் குரல் கொடுக்கவில்லை!
இந்தியாவிலேயே ஒரே ஒரு மாநிலத்தில் தான் எதிர்ப்பு வெளிப்பட்டது அது நான் தான்! எல்லோரும் என்னை பைத்தியக்காரன் என்றார்கள், அப்போ அது பிஜேபியின் கொள்கை இல்லையா? பிஜேபி உங்கள் கொள்கை எதிரி என்றால் காங்கிரஸ் உங்களின் கொள்கை நண்பனா என கேட்டால் ஆம் இல்லை என்று பதில் தானே சொல்ல வேண்டுமே தவிர எதற்கு எங்களை எதிர்க்கிறீர்கள் என்று பேசக்கூடாது. கொள்கைக்கும் அரசியலுக்குமான வேறுபாடை பற்றி கேள்வி எழுப்பினால் விளக்கத்தோடு பதில் சொல்ல வேண்டும் இல்லை என்றால் பேசக்கூடாது அண்ணன் சொல்லுறது உங்கள் உள்ளிட்ட விஜய்க்கு புரிகிறதா?
ஒரு தலைமை என்பது சரியாக வர வேண்டும் முன்னாள் நிற்பவன் நல்லவனா கெட்டவனா என்று பார்க்காதீங்க உண்மையானவனா என்று பாருங்கள் அவ்வளவு பேருக்கு மத்தியில் பேசுகிறீர்கள்!
கெட்டவன் எப்படி உண்மையாக இருப்பான் என கேள்வி கேட்டால் உங்களுக்கு பதில் சொல்ல தெரிய வேண்டும்.
மதசார்பற்ற சமூக நீதி என்ற கோட்பாட்டை முன் வைக்கிறீர்கள்! சாதிய ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பு என நாங்கள் பேசுவது சாதிய இழிவு இருக்கிறது தீண்டாமை கொடுமை இருக்கிறது அதனை ஒழிக்க வேண்டும் என பேசுகிறோம். இங்கு மத சார்புள்ள சமூக நீதின்னு ஒன்னு இருந்தால் மதசார்பற்ற சமூக நீதின்னு பேசுவது சரி! மதத்தின் அடிப்படையில் தான் இங்கு வகுப்பு வாரிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படுகிறதா? வகுப்பு என்பதே உங்களுக்கு தெரிகிறது சாதிய கட்டமைப்பு என்று
எந்த சாதியின் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரத்தை மறுக்கப்பட்டதோ அதே சாதியின் அடிப்படையில் கொடு என்ன போராடி பெற்றது தான் இந்த வகுப்பு வாரிய பிரதிநிதித்துவம்!
அது தெரியாமல் நீங்கள் மத சார்பற்ற சமூக நீதி என்கிறீர்கள்! உங்களின் மதசார்பற்ற சமூக நீதியில் கிறிஸ்தவ இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறதா இல்லையா? என கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும் அதை விடுத்து என்னை திட்டுகிறார் என்று பேசக்கூடாது! புரியுதா நான் கேட்கிறது என கூறினார்.
தம்பி உங்களுக்கு தேவையானவன், காசு வாங்கி தின்பவன் உங்களை புகழ்ந்து கொண்டு இருப்பான் இங்கு ஒருத்தன் நிற்கிறேன் கேள்வி கேட்பேன் பதில் சொல்லுங்கள்! என்னை கேட்டால் கண்டிப்பாக நான் பதில் சொல்லுவேன்.
பிஜேபியை கொள்கை எதிரி என்கிறீர்களே காங்கிரஸிடம் பெட்டி வாங்கிக் கொண்டீர்களா? திமுக அரசியல் எதிரி என்கிறீர்களே அதிமுகவிடம் பெட்டி வாங்கிக் கொண்டீர்களா? டேய் இதெல்லாம் என்னைக்கிடா ஒழிப்பீங்க? என சத்தம் போட்டு சிரித்தார். ஒரு தீப்பெட்டி கூட வாங்கி தர மாட்டான் டா அவன் என மீண்டும் சிரித்தார். கொள்கை எதிரிக்கும், அரசியல் எதிரிக்கும் தம்பிக்கு விளக்கம் தெரிய வேண்டும்.
இப்போது இந்த கூட்டம் யாருக்கு எதிராக போடப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? ஒன்றரை மணி நேரம் பேசிவிட்டு இப்படி ஒரு நிமிடம் கேள்வி எழுப்பினால் ஆ…..விஜய்யை திட்டி விட்டர் என கூச்சலிடக்கூடாது அவ்வளவெல்லாம் ஒன்னும் கிடையாது என்று கூறினார்.
தொப்புள்கொடி உறவு என முதல் முறையாக விஜய் பேசி இருக்கிறார் அதைப் பற்றி உங்களின் கருத்து என்ன என எழுப்பிய கேள்விக்கு?
வாய்ஸ் தானே கொடுத்து இருக்கிறார்! அதையும் பார்த்து தானே படித்தார்! சிரித்தவாறு கூறினார்.
தெவெகாவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டியென விஜய் திரும்பத் திரும்ப பேசுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு
எல்லோரும் சொல்லிக் கொள்வது தான்! சொல்வது தான்! அதிகாரத்தில் இருக்கிற கட்சியை எல்லோரும் எதிர்க்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள்! சில கேள்விகள் இருக்கிறது அல்லவா திமுக விற்கும் எனக்கும் போட்டி என்றால் எந்த அடிப்படையில் என்று தெளிவு படுத்த வேண்டும்.
பல ஆண்டுகளாக ஊறிப் போய் இருக்கிற ஒரு சித்தாந்தத்தை சினிமாவால் சீர்திருத்தி விட முடியாது. அதற்கு எதிரான வலுவான இன்னொரு சித்தாந்தத்தை வைத்துத்தான் சீர்திருத்த முடியும்! போட்டி என்று எல்லோரும் சொல்லிக் கொள்ளலாம். எந்தெந்த வழியில் போட்டி?
நான் திராவிட கட்சியின் ஆட்சி முறையை அடியோடு தகர்க்க வேண்டும் என்கிறேன். எப்படி தகர்ப்பாய்? சீமான் என கேள்வி எழுப்பினால் எனக்கு தெரியும்! இவர்கள் திட்டமிட்டு என் மொழியை அழித்தார்கள், என் மொழியை மீட்டுருவாக்கம் செய்வேன் வேலைவாய்ப்பை வழங்குவேன் ஊழல் லஞ்சமா உண்மை நேர்மையா என்று கேட்பேன், மக்களை வைத்து பிழைக்க வா, மக்களுக்காக உழைக்கவா எனக் கேட்பேன்! எந்த கோட்பாட்டு பக்கம் நீங்கள் நிற்கப் போகிறீர்கள்? உங்கள் பிள்ளைகளுக்கு வாழ்வதற்கு நீங்கள் வீட்டை வைத்து விட்டு போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்! நான் நாட்டை வைக்க வேண்டும் என்று கருதுகிறேன், காசு பணத்தை வைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் நான் சுவாசிக்க நல்ல காற்றை வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்! எங்கள் தங்கத்தை சேமித்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்! நான் குடிப்பதற்கு நல்ல தண்ணீரை வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒவ்வொன்றிற்கும் வேறுபாடு இருக்கிறது.
உங்களுடைய கோட்பாட்டில் இருந்து நான் மாறுகிறேன் என்று சொல்கிறேன். நீங்கள் செய்தி அரசியல் விளம்பர அரசியலில் இருக்கிறீர்கள்! நான் செயல் அரசியல் சேவை அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் கட்சி அரசியல் தேர்தல் அரசிலேயே நிக்கிறீர்கள் நான் மக்கள் அரசியலுக்கு போக வேண்டும் என்றும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
நீங்கள் பெரியார் என்கிறீர்கள்! என் இன முன்னவன் ஒவ்வொருவரும் எனக்கு பெரியார் என்கிறேன். பெரியார் இல்லாமல் இங்கு எதுவுமே இல்லை என்கிறார்கள்! பெரியாரால் எங்களுக்கு எதுவுமே இல்லை என்கிறேன்! இது பெரியார் மண் என்கிறாய்! நான் பெரியாரே மண் என்கிறேன்! கோட்பாட்டு அளவில் நான் மாறுபடுகிறேன் நீங்கள் திரும்பி திரும்பி அதே பெரியார் என்கிறீர்கள்! திமுகவை தொடங்கியவர் அண்ணா! அவரை தலைவராக வைத்துக்கொண்டு, அவர் தொடங்கிய கட்சியை அடிப்பேன் என்று பேசினால் என்ன அர்த்தம்! அப்பனிடம் அருவாளை வாங்கி மகனை கொலை செய்வதால் என கேள்வி எழுப்பினார்.
1990 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வரை உள்ள இளைஞர்களிடம் அரசியல் குறித்த விழிப்புணர்வு இல்லை என அனுப்பிய கேள்விக்கு,
அப்படி சொல்லாதீர்கள்! உங்களைப் போன்ற ஊடகங்கள் நான் பேசும் பேச்சுக்களை முழுமையாகவோ அல்லது தடையில்லாமலோ வெளியிடுக்கள் என்றும், தம்பி விஜய் -க்கோ அண்ணன் கமலஹாசனுக்கோ கொடுக்கிற முன்னுரிமையை எனக்கு கொஞ்சம் கொடுங்கள்! பார்ப்போம் மாற்றம் வருகிறதா என்று! சத்தியமாக வரும்! விழிப்புணர்வு இல்லாமலா எனக்கு 36 லட்சத்து 50 ஆயிரம் பேர் வாக்களித்தார்கள்!
கூட்டத்தை பார்க்காதீர்கள்! கொள்கையை பாருங்கள்! அதற்கு உண்மை நேர்மை தர்மம் வெல்லும் என்ற பாரதப்போரே முன்னுதாரணம்! கூட்டத்தை பார்க்காதீர்கள்! கூட்டம் வரும் நயன்தாரா சேலத்தில் பங்கேற்ற நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்த போது 60 ஆயிரம் பேர் கூடினார்கள். அதே நேரத்தில் 40 விவசாயிகள் நாட்டுக்காக போராடினார்கள்! என் பங்காளி வடிவேலுக்கு வராத கூட்டமா? ஐயா! விஜயகாந்திற்கு வராத கூட்டமா?
கூட்டம் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வர கூட்டம், அந்த படம் நன்றாக இருந்தால் அடுத்த காட்சியிலும் அதே கூட்டம் இருக்கும்! ரொம்ப நல்லா இருந்தா அடுத்த அடுத்த காட்சிகளிலும் கூட்டம் இருக்கும்! இல்லை என்றால் திரையரங்கில் ஒருவரும் இருக்க மாட்டார்கள்! நீங்கள் என்ன எடுத்து வைக்கிறீர்கள் என்பதை பொறுத்து தான்!
நான் பேசுவதை எத்தனை கோடி பேர் பார்க்கிறார்கள் என்பதை பாருங்கள்! கோவையில் நான் பேசியதை 2 கோடி பேர் பார்த்துள்ளனர். அதே என் தம்பி மாநாட்டில் பேசியதையோ அல்லது நாகப்பட்டினத்தில் பேசியதையோ எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்பதை பாருங்கள்! அவரைப் பார்க்கக் கூடுவான் பேசுவதை கேட்கக் கூட மாட்டான்!
என்னை பார்க்க கூட மாட்டான் இந்த மகன் என்ன பேசுறான் என நான் பேசுவதை கேட்கக் கூடுவான் இரண்டிற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.
விஜய் உங்களை ஒரு இடத்தில் கூட விமர்சனம் செய்யவில்லையே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு,
திரும்பத் திரும்ப இதுபோன்று கேள்வி எழுப்பினால் எரிச்சல் படாமல் கோபப்படாமல் என்ன செய்ய முடியும் என ஆவேசமாக பேசிய சீமான் இதை போய் விமர்சனம் என்கிறாய் கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டுமே தவிர, கேள்வியை விமர்சனம் என்று சொல்லக்கூடாது.
பெரம்பலூருக்கு கடந்த சனிக்கிழமை வந்த விஜய் மக்களை சந்திக்காமல் சென்று விட்டதால் இந்த சனிக்கிழமை நீங்கள் பெரம்பலூருக்கு வந்துள்ளீர்களா? என எழுப்பிய கேள்விக்கு,
தமிழகத்தின் மைய பகுதியில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தில் முறைகேடுகள் குறித்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் ஏற்கனவே நாங்கள் திட்டமிட்டு அனுமதி கேட்டதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் இது கூட்டமாக தற்போது நடைபெற்று வருகிறது.
வேலுநாச்சியாரை கொள்கை தலைவராக வைத்தது அவர்கள் விருப்பம்! ஏன் வைத்தார்கள் என்பதற்கு அவர்கள் தான் விளக்கம் தர வேண்டும்.
முருகனை நான் கொள்கை தலைவராக வைத்தால் நீங்கள் எப்படி பார்ப்பீர்கள்! அது என் இறை, கண்ணகி காப்பிய நாயகி, வேலு நாச்சியார் என்பவர் வரலாற்று நாயகி! இந்தியத் துணைக்கண்டத்திலே எங்களது பாட்டிக்கு இணையான வீராங்கனைகள் எவருமில்லை!
விடுதலைப் போரில் என் முன்னோர்கள் உள்ளிட்ட பல மன்னர்கள் தோற்று இருந்தாலும் என் பாட்டி மட்டும்தான் விடுதலை போரில் வென்று இருக்கிறார்கள்! அவர் பெருமைக்குரிய மகள்! அவரைக் கொள்கை தலைவராக ஏற்று இருக்கிறார். அவருக்காக வேலு நாச்சியார் சிலை வைக்கப்படவில்லை! ஸ்டாலின் சொன்னாரா? அவருக்காக (விஜய்) வைத்தேன் என்று? ஏன் தம்பி பைத்தியம் போல பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என ஆவேசமாக பேசிய சீமான், செய்தியாளரை நோக்கி கையை நீட்டி என்ன எல்லோரும் பைத்தியமாகி விட்டீர்களா?
போங்க தம்பி என கோபமாக கூறிய சீமான் கேள்வி கேட்கத் தெரிந்தால் கேட்க வேண்டும், அவருக்காக சிலை வைத்தேன் என்று உங்களிடத்திலே சொன்னாரா என எதிர் கேள்வி எழுப்பினார். 2026 பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் ஜான்சிராணி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட ஆயிரக்காணோர் கூட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497