Woman arrested for stealing jewelry in modern manner in Perambalur
பெரம்பலூரில் நகை வாங்குவது போல் நடித்து கவரிங் நகையை வைத்து விட்டு 6 பவுன் தங்க நகையை திருடிச்செல்ல முயன்ற பெண்னை நகைக்கடை உரிமையாளர் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் கடைவீதியில் தேரடி அருகே நகை கடை நடத்தி வருபவர் வரதராஜ் (35), இவர் நேற்று மதியம் கடையில் வழக்கம் போல் விற்பனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, நகை வாங்குவது போன்று கடைக்கு வந்த பெண் ஒருவர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பல்வேறு நகைகளை எடுத்து காண்பிக்கும்படி பார்த்துள்ளார்.
பின்னர், ஒரு தங்கசங்கலியை தேர்வு செய்த அந்த பெண் தன்னிடம் இருந்த ஒரு பழைய சங்கிலியை கொடுத்து, இதனை எடை போட்டு மதிப்பிடுங்கள் மீதி பணம் தருகிறேன் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் கொடுத்த சங்கிலியை கடை உரிமையாளர் சோதனையிட்ட போது அது கவரிங் நகை என தெரிய வந்ததும், நகை போலியானது என கடை உரிமையாளர் கூறியதும், நகை வாங்க வந்த அந்த பெண் கடையை விட்டு வெளியே எழுந்து சென்று ஓடித் தொடங்கியுள்ளார்.
இதனையறிந்த கடை உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் ஓடிச்சென்று அந்த பெண்ணை துரத்தி பிடித்து போலீசுக்கு தகவல் தெரிவித்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து, பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அந்த பெண்னிடம் போலீசார் விசாரித்ததில் அவர் சென்னை நுங்கபாக்கத்தை சேர்ந்த கோவிந்தன் மனைவி ராதா(வயது 35) என்பதும், இவர் ஊர், ஊராக சென்று இதே போன்று போலி நகைகளை கொடுத்து நகைக் கடைகளில் தங்க நகைகளை நூதன முறையில் திருடி வருவதும் தெரிய வந்தது.
இதனையடுத்து ராதா மீது பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.