Work on “Clean service” in Perambalur Stadium
பெரம்பலூர் : இந்திய அரசின் உத்தரவுப்படி செம்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் “தூய்மையே சேவை” என்ற தலைப்பின் கீழ் தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில் மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் பல்வேறு வகையான தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக இன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் “தூய்மையே சேவை” இயக்க பணிகளை மாவட்ட ஊரக வளர;ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஸ்ரீதர் தூய்மை படுத்தும் பணி மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 250 மாணவ மாணவியா;கள் மற்றும் விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்நுகொண்டனர்.
உறுதிமொழி ஏற்று பங்குபெற்ற மாணவ மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கி தூய்மையின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு நல அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.