Worker at the death of drug swallowed poison near in Perambalur
பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் அருகே உள்ள களரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் மகன் பாலசுப்பிரமணியன் (வயது 40). கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு போதையில் இருந்த, அவர் மனமுடைந்த அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு, முதலுதவி அளித்து சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.