World Astronomical Week: School student and essay competition among students
மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன நிர்வாக அலுவலர் பூபதி விடுத்துள்ள தகவல் :
மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக, 04.10.2017 முதல் 10.10.2017 வரை உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளிடையே கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கலாம்.
அதன்படி இவ்வருடம் நடைபெற உள்ள கட்டுரைப் போட்டியின் தலைப்புகளாக நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு “அண்ட வெளியில அந்நிய உலகத்தைத் தேடி…” (“ஐn ளநயசஉh ழக யn யடநைn றழசடன…”)என்ற தலைப்பிலும், உயா;நிலைப் பள்ளி மாணவா;களுக்கு “பு+மியில் வாழுஞ்சூழலற்றுப் போனால்… அடுத்து என்ன??” (“If earth becomes inhabitable, What next???”) என்ற தலைப்பிலும், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு “இன்னொரு கிரகத்துக்கு இன்ப சுற்றுலா போவோமா?” (“A trip to our neighbouring planets”) என்ற தலைப்பிலும் நடைபெற உள்ளது.
இக்கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருத்தல் வேண்டும். மேலும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து சமர்ப்பிப்பவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படமாட்டாது.
கட்டுரைகள் தெளிவாகவும், திருத்தமாகவும் மாணவ மாணவியர்களின் கையெழுத்தில் A4(210x197mm) அளவு தாளில் 2,000 வார்த்தைகளுக்கு மிகாமலும், ஒவ்வொரு தாளிலும், ஒரு பக்கம் மட்டும் எழுதியிருத்தல் அவசியம்.
மேலும் போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் தங்கள் பெயர், வயது, வகுப்பு, பள்ளியின் பெயர், பள்ளியின் முகவரி, பெற்றோர் பெயர், வீட்டின் முகவரி, தொலைபேசி எண் ஆகியவை குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்தக் கட்டுரை தங்களால்தான் எழுதப்பட்டது என்பதை உறுதிப்படுத்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து ஒப்புதல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இக்கட்டுரைகள், 05.10.2017 க்குள் கிடைக்கும் வகையில் The Administrative Officer, IPRC/ISRO, Mahendragiri P.O., Tirunelveli District, Pin – 627 133, Tamilnadu என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். உறையின் மேல் கட்டுரைப் போட்டி என்று குறிப்பிடப்பட வேண்டும்.
தமிழ், ஆங்கில கட்டுரைகளுக்கு தனித்தனியாக முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பரிசு பெற்றவர்களின் விவரங்கள் தனியாக தெரிவிக்கப்பட்டு அக்டோபர் மாதம் மகேந்திரகிரியில் நடக்கும் உலக விண்வெளி வார விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
மேலும் விவரங்களை 04637-281210, 283510 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது wsw2017@iprc.gov.in, என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தெரிந்துகொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.