World Record event: Youth Day hosted by the Rotary New Gen Club in Perambalur
பெரம்பலூரில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி : இளையோர் தினத்தை முன்னிட்டு ரோட்டரி சங்கம் நடத்தியது (காணொளி)
பெரம்பலூரில், சர்வதேச இளையோர் தினத்தை (ஆக.12) முன்னிட்டு, புதிய தலைமுறை ரோட்டரி கிளப் மற்றும் பெரம்பலூர் ரோவர், ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து இளைஞர்களிடையே சமூகம், பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம், வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் “உன்னால் முடியும்” (YOU CAN YOU WILL) என்ற எழுத்து வடிவில் நிற்கும் கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சோனல்சந்த்ரா தலைமையில், தனியார் பள்ளி கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் என 16 ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்டனர்.
இந்த எழுத்து வடிவம் 182 மீட்டர் நீளத்திலும், 60 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை உலக கின்னஸ் மற்றும் இந்திய புக் ரெக்கார்டு ஆகிய இரு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பார்வையிட்டு விருது வழங்கினர். இன்னும் ஒரு மாதத்திற்கு பின்னர் கின்னஸ் சாதனைக்கான விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மாவட்ட ரோட்டரி ஆளுனர் முருகானந்தம், வருங்காலஆளுனர்கள் கோபால கிருஷ்ணன்(தேர்வு), கண்ணன் (நியமனம்), ரோட்டரி சிறப்பு திட்ட இயக்குனர் ஆனந்தஜோதி, ரோவர் குழுமத் தலைவர் வரதராஜன், ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக்குழும தலைவர் சிவசுப்ரமணியன் மற்றும்
கின்னஸ் சாதனை திட்ட தலைவரும், ரோவர் குழுமத்தின் துணைத் தலைவருமான ஜான் அசோக் வரதராஜன், செயலாளர் விவேகானந்தன், இளம்தலைமுறை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பேராசிரியர் மகேந்திரன், சிங்காரம் ஊர்க்காவல் படை மண்டலத் தளபதி வள்ளலார் ஜெ.அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.