Youths arrested for hunting wild animals in unlicensed country rifles near Perambalur!!
பெரம்பலூர் அருகே உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியால், வனவிலங்குகளை வேட்டையாட வந்தவர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி வனத்தில், அனுமதியின்றி 2 பேர் துப்பாக்கியால் வேட்டையாட இன்று நள்ளிரவு 1 மணி அளவில் சென்றுள்ளனர். அப்போது, ரோந்து பணியில் இருந்த வனவர் பிரதீப்குமார் தலைமையிலான வனத்துறையினர், அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள், பெரம்பலூர் மாவட்டம், செஞ்சேரி கிராமத்தை சேர்ந்த, தங்கராசு மகன் கலைச்செல்வன் (32), லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் ரமேஷ் (30), என்பவது தெரியவந்தது.
மேலும், அவர்களிடம் இருந்து, ஹீரோஹோண்டா ஸ்பிளின்டர் பைக் மற்றும் உரிமம் இல்லாத, ஒற்றைக் குழல் கள்ள நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்து, வன உயிரின பாதுகாப்புச் சட்டம்1972 , மற்றும் படைக்கலன் பாதுகாப்புச் சட்டம் 1959-ன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில், நேர்நிறுத்தி, அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர்.