கோவையில் தடை செய்யப்பட்ட 840 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் கோவையை அடுத்த ராஜ வீதி பகுதியில் சட்ட விரோதமாக குட்கா கடத்தப்படுவதாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், பெங்களூரில் இருந்து வந்த வேனை மடக்கி ஆய்வு செய்தனர். இதில், 840 கிலோ குட்கா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வேனை நிறுத்தி விட்டு, ஒட்டுநர் தப்பி ஓடியநிலையில், ராஜஸ்தானை சேர்ந்த உரிமையாளரை காவல் துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர் .