தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடத்திய பேரணியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய, இச்சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள், ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை தலைமை தபால் நிலையம் முன்பு, இரு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது.