Perambalur: District DMK In-charge V. Jegadeesan inspected the premises to ensure the security of the voting machines. Candidate Jayalakshmi accompanied him.

பெரம்பலூர், குன்னம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குகள் எண்ணும் மையமாக ஆதவ் பப்ளிக் பள்ளி தேர்வு செய்யப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக்கருவிகள் மற்றும் VVPAT கருவிகள் ஆகியன, பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கென்று தனித்தனியே ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர்,குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் மையத்தை மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் பார்வையிட்டு, அங்குள்ள அதிகாரிகளிடம் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். அப்போது வேட்பாளர் டாக்டர் ச.த. ஜெயலெட்சுமி உடனிருந்தார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!