Agriculture Department Information to farmers be registered in Crop Insurance Scheme for Perambalur District

பெரம்பலூர் மாவட்ட வேளாண்துறை விடுத்துள்ள தகவல்:

பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2017-2018 ஆண்டிற்கு ராபி பயிர்களான, நெல் III, துவரை, மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, கரும்பு பயிர்களுக்கும், தோட்டக்கலை பயிர்களான மிளகாய், மரவள்ளி மற்றும் வெங்காயம் பயிர்களுக்கும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் தொகையினை வங்கி மூலமாகவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவும் செலுத்தலாம். பயிர்க் கடன் மற்றும் விவசாய நகைக் கடன் பெறும் விவசாயிகளிடமிருந்து பிரிமியம் தொகை கட்டாயமாகவும், கடன் பெறா விவசாயிகளிடம் விருப்பத்தின் பேரிலும் பிரிமியத் தொகை செலுத்தலாம்.

விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர குடும்ப அட்டை ஜெராக்ஸ், ஆதார் கார்டு ஜெராக்ஸ், கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், கணக்கு வைத்துள்ள வங்கி புத்தக முதல் பக்க ஜெராக்ஸ் ஆகியவற்றுடன் செல்போன் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்.

கடன் பெறும் விவசாயிகள் அந்தந்த வணிக வங்கிகளிலும், கடன்பெறா விவசாயிகள் வணிக வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் பொது சேவை மையங்கள் மற்றும் வேளாண் காப்பீட்டு நிறுவன முகவர்களிடம் சேரலாம்.

விவசாயிகள் பிரிமியம் தொகையாக ஏக்கருக்கு நெல் III, துவரை பயிருக்கு ரூ.402, மக்காச்சோளம் ரூ.276- உளுந்து ரூ.195-, நிலக்கடலை ரூ.340- மற்றும் கரும்பு பயிருக்கு ரூ.1950- தோட்டக்கலை பயிதுகளான மிளகாய் ரூ.840-, மரவள்ளி ரூ.1150- மற்றும் வெங்காயம் ரூ.1425- தொகை டி.டி எடுத்து சேர்ந்து கொள்ளலாம்.

பிரிமியம் செலுத்துவதற்கான கடைசி நாள்: நெல், துவரை, மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை பயிர்களுக்கு 15.02.2018, கரும்பு பயிர்க்கு 31.10.2018 தோட்டக்கலை பயிர்களுக்கு 28.02.2018.

இந்த ஆண்டு ராபி பருவத்தில், சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் துவரை பயிர்க்கு 45 வருவாய் கிராமங்கள், மக்காச்சோளம் 61 வருவாய் கிராமங்கள், உளுந்து 10 வருவாய் கிராமங்கள், நிலக்கடலை 28 வருவாய் கிராமங்கள், கரும்பு 90 வருவாய் கிராமங்களுக்கும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆகையால், அதிகளவில் விவசாயிகள் முன்வந்து தாங்கள் பயிரிட்டுள்ள மற்றும் பயிரிடப்படவுள்ள ராபி பயிர்களுக்கும் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட பயிர்களுக்கான அறிவிப்பு செய்யப்பட்ட வருவாய் கிராமங்களின் விவரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை பகுதி வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!