The northeast monsoon season review meeting for the precautionary principle
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 01.10.17 முதல் வடக்கு கிழக்கு பருவ மழை பொழியும் காலமாக கணக்கிடப்பட்டு, மழை, வெள்ள சேதங்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்தன் அடிப்படையில் அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுக்குண்டான பணிகளை எவ்வித தொய்வுமின்றி விரைந்து செயலாற்றிட வேண்டும்.
மழைக்காலங்களில் வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதியளாக கண்டறியப்பட்ட இடங்களுக்கு கண்கானிப்பு பணிகளில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மழை, வெள்ள காலங்களில் பாதிப்பு ஏற்படும் சமயத்தில் பொதுமக்களை தங்கவைப்பதற்கு தகுதியான இடங்களை வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் தேர்வுசெய்து கொள்ள வேண்டும்.
மேலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் அவசர கட்டுப்பாட்டு அறையின் இலவச தொலைபேசி எண்ணான 1077 -ஐ அனைத்து பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் தேவையான விளம்பர பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அவசர காலங்களில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தேவையான கனரக இயந்திரங்கள், பவர;ஷா உள்ளிட்டவைகளை தேவையான அளவில் இருப்பில் வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
அரசுக்கட்டிடங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தல ஆய்வு மேற்கொண்டு கட்டிடங்களில் உறுதி தன்மையை பரிசோதிக்க வேண்டும். மேலும் மழை வெள்ள காலங்களில் பொதுமக்களுக்கு எவ்வித தடங்களுமின்னி உணவு பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பான விரிவான முன்னேற்பாடுகளை தொடர்புடைய அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மழைக்காலங்களில் தண்ணீர் ஊருக்குள் புகும் நிலைமை இருக்கும் பட்சத்தில் பள்ளிகளிலும், அருகில் உள்ள அங்கன்வாடி மையங்கள், சமுதாயக்கூடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை தங்கவைக்கும் வகையில் அவற்றின் சாவிகள் கிராம நிர்வாக அலுவலர்களிடமும் இருக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைக்காலங்களில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, வடகிழக்கு பருவ மழை காலத்தில் ஏற்படும் மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களிலிருந்து பொதுமக்களை காப்பாற்றிட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) மனோகரன், கூடுதல் காவல் கண்கானிப்பாளர் ஞான.சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவழகன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் மகாராஜன், அனைத்து வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.