ஸ்டெர்லைட் போராட்டத்தில் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்று கூட வேண்டும் என ஜிக்னேஷ் மேவானி வேண்டுகோள் விடுத்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கருத்துகளையும், கண்டனங்களையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜிக்னேஷ் மேவானி தனது டுவிட்டர் பக்கத்தில், குமாரசுவாமி பதவியேற்பு விழாவில், பா.ஜ.க-வுக்கு எதிராக ஒன்று கூடிய அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, அவர்களது போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.