Perambalur: May Day — Blood Donation Camp Organized by the District All Painters and Artists Association!

மே தினத்தை கொண்டாடும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 6ம் ஆண்டு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் கோவை மற்றும் சங்கு பேட்டை சிட்டி யூனியன் பேங்க் அருகே உள்ள ஸ்ரீ சாய்ராம் கல்வி நிறுவனம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. அனைத்து பெயிண்டர்கள் சங்க உறுப்பினர்கள் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 50 நபர்கள் ரத்தம் கொடையாக வழங்கினர். இரத்தம் கொடையாக வழங்கிய அனைவருக்கும் அரசு மருத்துவமனை டாக்டர் சரவணன் கொடையாளர் சான்று வழங்கி பராட்டினார். இதில் ஸ்ரீ சாய்ராம் கல்வி நிறுவனர் லதா, குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கில துறை பேராசிரியர் பிரியதர்ஷினி கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரத்த வங்கி ஆலோசகர் மனோகரன், செவிலியர்கள் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு இரத்தம் சேகரித்தனர். இதில் சேகரிக்கப்பட்ட இரத்தம் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது.

மாநில செயற்குழு உறுப்பினர் சி.ப. கிட்டு (எ) கிருஷ்ணசாமி, மாநில ஒருங்கினைப்பாளர் யோகநாதன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் பாலசுப்ரமணி, பெரம்பலூர் மாவட்ட கவுரவ தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் ரமேஷ்அர்ஜுனா, மாவட்ட பொருளாளர் காமராஜ், மாவட்ட ஒருங்கினைப்பாளர் ராம்குமார், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன்,நகர தலைவர் செந்தில்குமார், நகர செயலாளர் ரமேஷ், நகர பொருளாளர் தர்மராஜ், ஒன்றிய தலைவர்கள் சக்திவேல், தாஜீதின், தமிழ்செல்வன், ஒன்றிய துணை தலைவர் கார்மேகம், ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், இப்ராஹிம் பாஷா,ஒன்றிய பொருளாளர்கள் சம்சுதின், அஹமது, ஒன்றிய துணை செயலாளர்கள் செல்வம்,ரவி, மகளிர் அணி தலைவர் ராஜேஸ்வரி ஆறுமுகம், மகளிர் அணி செயலாளர் புவனேஸ்வரி ராம்குமார், மகளிர் அணி பொருளாளர் ரஹமத் நிஷா இப்ராஹிம் பாஷா, மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் சபியா தாஜிதீன், மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் ஆசியா பேகம் அஹமது,உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி மே தினத்தை கொண்டாடினர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!