பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

perambalur_collectorateசீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களின் 10-ஆம் வகுப்பு படித்துவரும் பெண் குழந்தைகள், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், மற்றும் 11-ஆம் வகுப்பு படித்துவரும் பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.1000- வீதம் கல்வி உதவித்தொகையும், 12-ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைகள், 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் முறையான பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு தலா ரூ.1500- வீதம் கல்வி உதவித்தொகையும், மாணவர் இல்ல வசதியுடன் கூடிய முறையான பட்டப்படிப்பிற்கு ரூ.1750- கல்வி உதவித்தொகையும், முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ.4000- ம், மாணவர் இல்ல வசதியுடன் கூடிய முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ.5000-ம், தொழிற்கல்வி பட்டப்படிப்புக்கு ரூ.4000-ம், மாணவர் இல்ல வசதியுடன் தொழிற்கல்வி பட்டப்படிப்புக்கு ரூ.6000- ஆயிரமும் கல்வி உதவி தொகையாக வழங்கப்படும்.

மேலும் சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களின் மகன் அல்லது மகளுக்கு தொழிற்கல்வி பட்ட மேற்படிப்புக்கு ரூ.6000-ம் கல்வி உதவித்தொகையும், மாணவர் இல்ல வசதியுடன் கூடிய தொழிற்கல்வி பட்ட மேற்படிப்பு பயில்பவருக்கு ரூ.8000-ம், ஐ.டி.ஐ அல்லது தொழிற்பயிற்சி படிப்பிற்கு ரூ.1000-ம், மாணவர் இல்ல வசதியுடன் கூடிய ஐ.டி.ஐ. அல்லது தொழிற் பயிற்சி படிப்பிற்கு ரூ.1200-ம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

திருமண உதவித்தொகையாக ரூ.2000-, மகப்பேறு காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் ஆறு மாதங்களுக்கு ரூ.6000- கருச்சிதைவு, கருக்கலைப்பு நேர்ந்தால் ரூ.3000- மூக்கு கண்ணாடி செலவு தொகையை ஈடு செய்ய ரூ.500- மற்றும் முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ.1000-ம் வழங்கப்படும்.

சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ. ஒரு லட்சம், விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10000- முதல் ரூ.1,00,000- வரையிலும், இயற்கை மரணத்திற்கான உதவித்தொகையாக ரூ.15,000- ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூ.2,000- வழங்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் உறுப்பினராக பதிவு செய்திடவும், பதிவு செய்த சீர்மரபினர்கள் மேற்கண்ட நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையலாம், என அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!